Categories: Cinema News latest news

முன்னணி நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்… திரையுலகை அதிர வைத்த சிம்பு பட நடிகை..

சினிமாவில் நடிக்க வரும்/ நடித்து வரும் நடிகைகள் பாலியல் சீண்டலுக்கோ, மீடூ புகார் கூறும் அளவுக்கு அவ்வபொழுது சிக்கி விடுகின்றனர். இதனை பலர் வெளிப்படையாக கூறி விடுகின்றனர். ஆனால், யாரும் தவறு செய்த நபர் பெயரை வெளியிட மறுத்து விடுகின்றனர்,.

அப்படித்தான் அண்மையில் ஒரு புகார் வந்துள்ளது. பாலிவுட் சினிமாக்களில் அதிகமாக நடித்து பெயர் வாங்கிய நடிகை மல்லிகா ஷெராவத்,  இவர் தமிழில் சிம்பு நடித்த ஒஸ்தி திரைப்படத்தில் கலாசலா எனும் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருப்பார்.

இவர் அண்மையில் கூறுகையில், எனக்கு முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைக்காது. ஏனென்றால், முன்னணி நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பார்கள். நள்ளிரவு 2 மணிக்கு எல்லாம் போன் செய்து அழைப்பார்கள். அவர்கள் கூப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். அப்படி மறுத்து விட்டால் பட வாய்ப்புகள் கிடைக்காது.

இதையும் படியுங்களேன் – ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்த ஏர்போர்ட் போனால் அஜித்தை பார்த்து விடலாம்.. வெளியான செம சீக்ரெட் தகவல்…

அப்படிப்பட்ட பட வாய்ப்பு எனக்கு தேவையில்லை. ஆதலால் நான் அதனை மறுத்துவிட்டேன். அதனால் தான் முன்னணி நடிகர்கள் படத்தில் நான் நடிக்கவில்லை என்று மிகவும் வெளிப்படையாக தனது பதிலை கூறி பாலிவுட் சினிமாவை அதிர வைத்து விட்டார் மல்லிகா ஷெராவத்.

Published by
Manikandan