நடு ராத்தில கூட அட்ஜெஸ்ட் பண்ணனும்- பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய கமல் பட நடிகை…
பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் மல்லிகா ஷெராவத். இவர் ஹிந்தியில் “மர்டர்”, “வெல்கம்”, “ஹிஸ்ஸ்” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதே போல் ஜாக்கி சான் நடித்த “தி மித்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் தமிழில் “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் “குரு” படத்தில் “மையா மையா” என்ற பிரபலமான பாடலிலும், சிம்புவின் “ஒஸ்தி” திரைப்படத்தில் “கலசலா கலசலா” என்ற பாடலிலும் நடனமாடியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மல்லிகா ஷெராவத், பாலிவுட்டை குறித்து மிகவும் அவெளிப்படையாக பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“பாலிவுட்டில் பல டாப் ஹீரோக்கள் யாரும் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. ஏனென்றால் நான் அவர்களின் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். பாலிவுட்டில் பல ஹீரோக்கள் தங்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள்ளும் நடிகைகளுடனே நடிக்க விரும்புவார்கள். நான் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டேன். இதனால் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “ஹீரோக்கள் உட்காரச் சொன்னால் உட்கார வேண்டும். நிற்க சொன்னால் நிற்க வேண்டும். எதை சொன்னாலும் செய்யவேண்டும். நள்ளிரவு மூன்று மணிக்கு வீட்டிற்கு வரச் சொன்னாலும் நீங்கள் அதனை மறுக்கக்கூடாது. இதை எல்லாம் செய்ய மறுத்தால் அவர்களின் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடுத்த தளபதி நீங்கதான்… ஆள விடுங்கடா சாமிகளா!!… கும்புடு போட்டு கிளம்பிய பிக் பாஸ் நடிகர்…