சினிமாவுக்கு வரும் சிஎஸ்கே வீரரின் தங்கை.. அதுவும் நயன்தாரா தயாரிப்பில்!

Published on: October 30, 2021
nayanthara-malti chahar
---Advertisement---

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக விளையாடி வருபவர் தீபக் சாஹர். 29 வயதாகும் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஆரம்பத்தில் அருமையாக பந்துவீசிய இவர் கடைசி சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார்.

சென்னை அணி ‘ஃபிளே ஆப்’க்கு தகுதி பெற்றதும் ஸ்டேடியத்தில் வைத்து தனது காதலிக்கு, காதலை வெளிப்படுத்தினார். இவரது சகோதரர் ராகுல் சாஹர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

deepak chahar
deepak chahar

இவர்களுக்கு மல்டி சாஹர் என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவர் கடந்த 2018 ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணி விளையாடிய அணைத்து போட்டிகளையும் நேரில் வந்து பார்த்து சென்னைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

அப்போதே மீடியாக்களில் அதிக கவனம் பெற்றார். இந்த போட்டிகளுக்கு முன்பே பிரபலமான செலிபிரிட்டி தான். கடந்த 2014 இல் நடந்த மிஸ். இந்தியா போட்டியில் கலந்து கொண்டவர். அதில் மிஸ் சுடோக்கு பட்டம் வென்றவர். தற்பொழுது நடிகை மற்றும் விளம்பர பட மாடல்.

இவர் கவுதம் மேனன் மற்றும் ராஜமவுலி படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில், தான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

malti chahar
malti chahar

விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் இயக்கத்தில் உருவாகிவரும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment