மாரிசெல்வராஜின் எண்ணத்தை சுக்கு நூறாக உடைத்த ரசிகர்கள்! ‘மாமன்னன்’ படத்தால் எழுந்த புதிய பிரச்சினை
இயக்குனர் மாரி செல்வராஜ் கதை மற்றும் இயக்கத்தில் வெளியான படம் தான் மாமன்னன். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க வடிவேலு இந்த படத்தில் மாமன்னாக நடித்திருப்பார். கூடவே பஹத், கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கியமான நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியல் சார்ந்த திரில்லர் கதையில் அமைந்த இந்த மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எந்த மாதிரியான வலிகளை அனுபவிக்கின்றனர், அவர்கள் படும் அவஸ்தை என்ன என்பதை சமீப காலமாக தன் படங்களின் மூலம் காட்டி வருகிறார் மாரி செல்வராஜ்.
அதேபோல தான் இந்த மாமன்னன் திரைப்படத்தையும் அதே நோக்கத்தில் எடுத்திருந்தார். திரையரங்கில் வெளியான போது படத்தில் நடித்த உதயநிதி மற்றும் வடிவேலுவை வெகுவாக பாராட்டினார்கள் ரசிகர்கள். அதேபோல எதிர்மறை காயாக இருந்த பஹத்தை ஓரளவுக்கு ரசிகர்கள் பாராட்டினார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ottயில் வெளியான இந்த மாமன்னன் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் பார்த்து ரசித்து வந்த நிலையில் பஹத் பாசிலுக்கு ஏராளமான ரசிகர்கள் ஒன்று கூடினர். அதுவும் உயர்ந்த ஜாதியினர்களாக கருதப்படும் சில சமூகத்தினர் பஹத்துக்கு ஆதரவாகவே பல மீம்சை போட்டு தலையில் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று எப்படி இவ்ளோ ரசிகர்கள் உருவானர்கள் என்று.
இதையும் படிங்க : ஜோதிகாவை ஜோடியாக்க விஜய் போடும் திட்டம்! லண்டனில் நடக்கும் ரகசிய சந்திப்பு
ரத்தினவேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பஹத் அந்த படத்தில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தினராக நடித்திருப்பார். இப்படி இருக்கையில் ஓடிடியில் வெளியான பிறகு சில ஜாதியினருக்கு என்றே சினிமாவில் ஒரு சில பாடல்கள் இருக்கும். அந்தப் பாடல்களை பஹத்துக்காக reels வீடியோக்களாக போட்டு வெவ்வேறு உயர்ந்த ஜாதி சமூகத்தினர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதை கவனித்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக அமைப்பினர்கள் என ஒவ்வொருவரும் மிகுந்த அப்சட்டில் இருக்கிறார்கள். எங்கே போகிறது நாடு என்று புலம்பி வருகின்றனர். ஏதோ ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இந்த மாமன்னன் திரைப்படம் இப்போது வேறு ஒரு டிராக்கில் செல்வதை கண்டு ஏன் மாறி செல்வராஜு கூட அதிருப்தியில் இருக்கலாம் என கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு படி மேலாக ஒரு குறிப்பிட்ட ஜாதி சமூகத்தினர் பஹத்தை இப்படி பெருமைப்படுத்துவது சரியா தவறா என விவாதம் கூட நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க : எஸ்.பி.பி ரொம்ப கடுப்பாகிட்டார்.. ‘தந்தானே தாமரப்பூ’ பாடலுக்கு பின்னால் இத்தனை பிரச்சனையா?