மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘மாமன்னன்’ திரைப்படம். இந்த படம் உதயநிதி அரசியலில் தீவிரம் காட்டுவதற்கு முன்பாகவே நடித்த படம் தான் மாமன்னன். மேலும் அவர் அமைச்சர் ஆனபிறகு இதுதான் தான் நடிக்கும் கடைசி படம் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கின்றது.மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா கூட கோலகலமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தப் படம் ஓடுவது கொஞ்சம் கஷ்டம் தான் என்று பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது நடிகர் வடிவேலுவை பற்றியும் கூறினார். வடிவேலுவை பொறுத்தவரைக்கும் கம்பேக் கொடுத்து நடித்த படம் என்று சொன்ன படங்கள் எல்லாமே ஓடவில்லை என்றும் கூறினார். அதாவது எலி, தெனாலி, நாய் சேகர் போன்ற படங்கள் தான் வடிவேலுவின் கம்பேக்கில் வந்த படங்கள். அந்த வகையில் மாமன்னன் படமும் வடிவேலுவின் கெரியரை தூக்கி நிறுத்துமா என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் வடிவேலு இந்த படத்திலும் எப்படி நடித்திருக்கிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மாரிசெல்வராஜை பொறுத்துவரைக்கும் கதையில் ஆணித்தரம் காட்டுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தே இருக்கும்.அந்த வகையில் இந்தப் படமும் அப்படித்தான் இருக்கும் என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அரசியலுக்கு வந்த பிறகு உதய நிதியின் நடிப்பில் வெளிவருவதால் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு வந்த நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் வெற்றியை சந்தித்தது இல்லை எனவும் உதாரணத்திற்கு எம்ஜிஆர், விஜயகாந்தை குறிப்பிட்டு சொன்னார் மீசை ராஜேந்திரன். அதனால் உதய நிதியின் இந்தப் படம் வெற்றி பெறும் என்பதில் கொஞ்சம் சந்தேகம்தான் என்றும் கூறினார்.
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…