அல்லு அர்ஜுன் டீயை வச்சு என்ன பெருசா ஸ்டெப் போட்டாரு!.. மம்மூட்டியோட ஸ்டைலை பார்த்தீங்களா!..

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் டீயை கையில் வைத்துக் கொண்டு அதை சுற்றி கீழே டீ கொட்டாதவாறு ஸ்டெப் போட்டு நடனமாடியது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. நடிகர் அஜித் குமார் தலை நரைத்துப் போக காரணமே அவர் சாப்பாட்டுக்கு பதிலாக டீ குடித்தே கஷ்டப்பட்டு தம்பிகளை வளர்த்தார் என வீரம் படத்தில் சிறுத்தை சிவா உருட்டியிருப்பார்.
தலைவலி என்றாலும் வெளியே நண்பர்களோடு சென்றாலும் டீ பார்ட்டி தான் பலருக்கும் ஃபேவரைட்டான ஒன்று. இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி டீயை எங்கே வைத்துக் குடிக்கிறார் பாருங்க என நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பிரியர்களை லைக் போட வைத்துள்ளது.

73 வயதிலும் ரஜினிகாந்த் போலவே மலையாளத்தில் மம்மூட்டியும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மகன் துல்கர் சல்மானே 2 வருடத்துக்கு ஒரு படம் கொடுத்தாலே பெரிய விஷயம் என நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இவர் ஒரு வருஷத்துக்கு 5 படத்தை வச்சிக்கோங்க என அடுத்தடுத்து வீட்டுக்குப் போவாரான்னே தெரியாத அளவுக்கு புதிய படங்களாக நடித்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

20 கோடி பட்ஜெட்டில் படமெடுத்து 30 முதல் 40 கோடி வசூல் வந்தால் கூட போதும் என்கிற லாபகரமான பிசினஸை நடத்தி வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலமாகவும் படங்களை தயாரித்து வெளியிட்டு லாபம் பார்த்து வருகிறார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான பஸூகா படத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், படம் வெளியான பின்னர் கூட படப்பிடிப்பு தளத்தில் காலில் கட்டன்சாயாவை வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக மம்மூட்டி பார்த்த வேலையை போட்டோக்களாக எடுத்து வெளியிட்டுள்ளார்.