மார்க்கெட் போனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மம்மூட்டி!.. முதலில் ஜோதிகா இப்போ எந்த நடிகை தெரியுமா?

by Saranya M |   ( Updated:2024-02-26 21:27:39  )
மார்க்கெட் போனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மம்மூட்டி!.. முதலில் ஜோதிகா இப்போ எந்த நடிகை தெரியுமா?
X

பேரன்பு படத்தில் அஞ்சலி உடன் இணைந்து நடித்த மம்மூட்டி, ஜோக்கர் படத்தில் நடித்தும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனை தனது நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடிக்க வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான காதல் தி கோர் படத்தில் ஜோதிகாவை தனக்கு ஜோடியாக மாற்றிருந்தார் மம்மூட்டி. அந்த படத்தில் மம்மூட்டி ஓரினச் சேர்க்கையாளராக நடிப்பதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஜோதிகா இணைந்து நடித்தார்.

இதையும் படிங்க: காம பார்வையால இருக்கு!.. கோட்டை கழட்டி அஞ்சலி என்ன பண்றாரு பாருங்க.. வேறலெவல் ட்ரீட்!..

மம்மூட்டியுடன் இணைந்து நடித்த நிலையில், அவரது மார்க்கெட் மீண்டும் உயர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் மாதவன் வில்லனாக நடித்துள்ளார். ஷைத்தான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், அடுத்ததாக மம்மூட்டியுடன் இணைந்து யார் நடிக்கப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக சமீபத்தில் மம்மூட்டியை நடிகை சமந்தா சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அய்யய்யோ ஆளவிடுங்க!.. எனக்கும் அந்த தயாரிப்பாளருக்கும் சம்மந்தமே இல்லை!.. அலறியடித்த அமீர்!

கடந்த ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியைடைந்தது. விஜய் தேவரகொண்டாவை நம்பி அவர் நடித்த குஷி படமும் பெரிதாக ஓடவில்லை. மேலும், சமந்தாவுக்கு புதிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது மம்மூட்டியின் அடுத்த படத்தில் அவர் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் கிளம்பி உள்ளன.

Next Story