Connect with us

விஜய் – எஸ்.ஏ.சி. பிரிவுக்கு இவர்தான் காரணமா?.. குடும்பத்தில் கொளுத்திப்போட்டது யார் தெரியுமா?..

Cinema News

விஜய் – எஸ்.ஏ.சி. பிரிவுக்கு இவர்தான் காரணமா?.. குடும்பத்தில் கொளுத்திப்போட்டது யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய். இவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். 80களில் பெரிய இயக்குனராக இருந்தவர். இவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். விஜயை அறிமுகம் செய்து சில திரைப்படங்களை இயக்கினார்.

திரையுலகில் முன்னணி நடிகராக தொழிலில் வளர்ந்து நின்றாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்பா – அம்மாவுடன் சமூகமற்ற நிலையில் விஜயின் உறவு இருக்கிறது. அவரது வாழ்க்கை ‘துப்பாக்கி’ திரைப்படத்திற்கு முன் ‘துப்பாக்கி’ திரைப்படத்திற்கு பின் என மாறிவிட்டது.

sac

அதாவது, துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்வரை விஜய் நடிக்கும் படங்களின் கதையை ஸ்.ஏ.சிதான் முடிவு செய்வார். மேலும், விஜய்க்கான சம்பளத்தையும் அவரே பேசி வாங்கி கொள்வார். இதனால் அதிருப்தி அடைந்த விஜயின் மனைவி சங்கீதா ஒருகட்டத்தில் விஜய்யிடம் ‘ஏன் நீங்களே கதை கேட்கக்கூடாதா?… உங்கள் பெயரிலேயே செக் வாங்க கூடாதா?.. என கிளப்பிவிட, இது சரிதான் என நினைத்த விஜய், அப்பா எஸ்.ஏ.சியிடம் இதுபற்றி பேச எல்லோர் வீட்டிலும் நடப்பது போல் அங்கேயும் பிரச்சனை வெடித்துள்ளது.

vijay

vijay

அதன் பின்னரே விஜய் ‘இனிமேல் எல்லாவற்றையும் நானே பார்த்து கொள்கிறேன்’ என தனியாக செயல்பட துவங்கினார். எஸ்.ஏ.சி வைத்திருந்த ஆட்களை தூக்கிவிட்டு வேறு ஆட்களை நியமித்தார். மேலும், தனக்கான கதை, சம்பளம் என எல்லாவற்றையும் விஜயே டீல் செய்தார். அதோடு, தந்தை – தாயை பிரிந்து சென்னை நீலாங்கரையில் தனியாக வீடு கட்டி தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார். இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யூர் பாலு ஒரு யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய்க்கும், அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பெரிதாக பேச்சுவார்த்தை கிடையாது. ஒருபேட்டியில் ‘விஜய் தனியாகவே இருக்கட்டும். நேரம் கிடைக்கும்போது எங்களை வந்து பார்த்தால் போதும்’ என மனம் உருகி எஸ்.ஏ.சி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “அஜித் படத்தை வேணும்ன்னே ஃப்ளாப் ஆக்குறாங்க”… பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு… இதென்ன புது கதையா இருக்கு??

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top