விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர் - அதிர்ச்சி வீடியோ
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர். எனவே, மிகவும் அதிகமான திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.
ஒருபக்கம் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா, டிவி, ஓடிடிக்கான படங்கள், வெப் சீரியஸ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிப்பது என எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார். ‘என் திருமண வீடியோவில் விஜய் சேதுபதி வருகிறாரா என பார்த்தேன்’ என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு அவர் பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில், பெங்களூர் விமான நிலையத்தில் அவர் தன் சாகக்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு நபர் ஓடி வந்து அவரின் பின்னால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. எனவே, அங்கிருந்தவர்கள் அவரை பிடிக்க பாய்கின்றனர். விஜய் சேதுபதியும் அவரை நோக்கி செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது? அவர் யார்? என்பது தெரியவில்லை.
அந்த நபர் குடி போதையில் இருந்ததாகவும், எந்த காரணமும் இன்றியே விஜய் சேதுபதியை எட்டி உதைத்துள்ளார் என்பதும் பின்னர் தெரியவந்தது. அவரை விமான படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Wats this shit!#VijaySethupathi ? pic.twitter.com/SYp3wnF931
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 3, 2021