சூப்பர்ஸ்டார்கள்… கடைசியில் மாஸ் வில்லன்… அசால்ட்டாக மாநாடு படத்தினை தட்டி தூக்கிய எஸ்.ஜே.சூர்யா…

SJ Surya: தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கன் என்ற அடையாளத்துடன் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்துக்கு முதலில் அவர் நடிப்பதாக இல்லையாம். அதற்கு முன்னர் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருந்தது மிஸ்ஸாகி போனதாக ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ச்சியாக விஜய் நடிப்பில் குஷி படத்தினை இயக்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களினையும் இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து நியூ திரைப்படத்தினை அவரே இயக்கி நடித்தார்.
இதையும் படிங்க: கமலின் சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்… அந்தப் படத்துக்கு மட்டுமாவது ‘ஓகே’ சொல்லியிருக்கலாமே..!
அப்படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்கத்தினை விட நடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. இருந்தும், சிம்புவுடன் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. வந்தான், சுட்டான், செத்தான், ரிப்பீட்டு என்ற வசனம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிக பிரபலமாக அமைந்தது.
இதையடுத்து, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பு அரக்கனாகவே தன்னுடைய ஸ்பெஷல் நடிப்பை கொடுத்து ரசிகர்களை அசரடித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து, கேம் சேஞ்சர், இந்தியன்2, வீர தீர சூரன், எல்ஐசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகராக எஸ்.ஜே.சூர்யாவை வளர உதவிய மாநாடு படத்தின் வாய்ப்பு முதலில் அவருக்கு கிடைக்கவில்லையாம்.
இதையும் படிங்க: வரிசையாக இரண்டாம் பாகங்கள்… கார்த்தி கைவசம் இத்தனை படங்களா?
வெங்கட் பிரபு அந்த போலீஸ் வேடத்துக்கு பசுபதியிடம் தான் முதலில் கேட்டு இருக்கிறார். ஆனால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து, ரவி தேஜா மற்றும் கிச்சா சுதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். ஏற்கனவே நான் ஈ படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடித்து ஹிட்டடித்து இருந்தார். ஆனால் அவருக்கு இப்படத்தின் கதை பிடித்தும் கால்ஷூட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனதாம்.
அதை தொடர்ந்து அந்த கேரக்டரில் அரவிந்த்சாமியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துவிட்டனர். ஆனால் திடீரென அவரும் நடிக்க முடியாமல் போனதாம். அதை தொடர்ந்தே அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா டிசிபி தனுஷ்கோடியாக நடித்து அசத்தி இருக்கிறார். இதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார். நல்ல வேளை மத்த யாரும் நடிக்கலை எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தனுஷோட அப்படி இருந்திருப்பாங்க! கடைசில தனக்கே ஆப்பு வைத்துக் கொண்ட சுசி