எல்லாம் கட்டுக்கதை!.....ரூ.100 கோடி வசூல் செய்ததா மாநாடு திரைப்படம்?....

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது.

மாநாடு படம் வெளியாகி 2 நாட்களில் ரூ.14 கோடி வசூல் செய்ததாகவும், 10 நாட்களில் மொத்தம் ரூ. 47 கோடியை இப்படம் வசூல் செய்ததாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, வட மாநிலங்களில் ஹிந்தி டப்பிங்கில் நேரிடையாக சுரேஷ் காமாட்சியே ரிலீஸ் செய்தார். அதோடு, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பல கோடிக்கு கேட்டு வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது இப்படம் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபமாக கொடுக்கும் என செய்திகள் கசிந்தது.

simbu

படம் வெளியாகி 3 வாரத்தில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. சிம்பு ரசிகர்களும் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதோடு, இப்படத்தில் வெற்றி விழாவையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது.

மாநாடு திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது உண்மைதான். ஆனால், இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யவில்லை என தயாரிப்பளர் தரப்பு கூறுகிறது. 100 கோடியை நெருங்கியிருக்கலாம் அவ்வளவுதான் என உண்மை விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

suresh kamatchi

படம் வெளியாகி சில நாட்கள் படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒருமுறை கூட மாநாடு படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக வெற்றி விழா உட்பட எந்த இடத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது, படம் வெளியாகி சில நாட்களிலேயே அப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதுதான் மாநாடு பட விஷயத்திலும் நடந்துள்ளது. ஆனால்,உண்மை நிலவரம் என்ன என்பது தயாரிப்பாளருக்கே வெளிச்சம் என்பது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கே தெரியும்.

 

Related Articles

Next Story