பெரிய தலைகள் சேர்ந்து கொண்டாடப்போகும் படத்தின் 100வது விழா...! படத்தின் நாயகன்...? பிரபலங்கள் எதிர்பார்ப்பு..
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான படம் தான் மாநாடு. இந்த படம் சிம்பு வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் வேற லெவல்ல திரும்பியது.
சிம்பு தன் கைவசம் நிறைய படங்கள் வைத்துக் கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறார். இதனிடையில் சில பல விழாக்களிலும் கலந்து கொள்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார்.
மாநாடு படத்தின் வெற்றியை பேசாதவர்களே இருக்க மாட்டார்கள்.ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் 100வது விழாவை வெற்றிகரமாக கொண்டாட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் ரஜினி, கமல் போன்ற பெரிய புள்ளிகளும் கலந்து கொள்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். படத்தின் நாயகன் வருவாரா என சந்தேகிக்கின்றனர். இதேபோல் அண்மையில்
பீஸ்ட் படத்தின் வெற்றியை படக்குழுவினரை மட்டும் கூட்டி விஜய் விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.