உருகி உருகி காதலித்த உதவியாளர்!… கனகா மனமுடைந்து போனதற்கு காரணமே அதுதான்!…

Published on: May 3, 2023
kanaga
---Advertisement---

திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தேவிகா. பல வெற்றிப்படங்களின் கதாநாயகி இவர். கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ படத்தை எடுத்தபோது கனகா கண்ணில் படவே தேவிகாவை படாத பாடுபட்டு பேசி சம்மதிக்க வைத்து அப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அப்போது கனகாவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது.

அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகவே கனகாவை தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார். மலையாளம், பாலிவுட்டிலிருந்து எல்லாம் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அப்போது அவரின் கால்ஷீட் விவகாரம், கதை கேட்பது, படப்பிடிப்பு அழைத்து செல்வது என எல்லா வேலையும் தேவிகா பார்த்துக்கொண்டார்.

ஆனால், திடீரென தேவிகா மரணமடையவே கனகா மனமுடைந்தார். அம்மாவின் ஆதரவிலேயே வளர்ந்த கனகாவுக்கு அம்மாவின் இழப்பை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனவே, சினிமாவில் நடிக்க ஆர்வமே வரவில்லை. தனிமையை நாட துவங்கினார். அப்போது தேவிகாவுடன் சில படங்களில் நடித்தவரும், தேவிகாவிடம் உதவிகளை பெற்றவருமான ஒருவர் கனகாவை பார்த்து கொள்ள அவரது மகனை அனுப்பி வைத்துள்ளார்.

அவரது மகனும் கனகாவை சோகத்திலிருந்து மீட்டு, அவரே கதைகளை கேட்டு, கனகாவை மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வைத்தார். கனகாவும் இரண்டாவது ரவுண்டு வந்தார். ஒருகட்டத்தில் கனகாவை நாமே திருமணம் செய்து கொண்டால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கனகா மீது அவருக்கு ஒருதலை காதலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், கனகா அவரை தவறாக புரிந்து கொண்டாராம். உன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்கிற ரீதியில் கனகா மிரட்ட அந்த நபர் கனகாவிடமிருந்து விலகினார். சில வருடங்களில் அவர் நோய்வாய்பட்டு இறந்தும் போனார். அதன்பின்னரே அவர் உண்மையாகவே தன்னை காதலித்துள்ளார் என்பது கனகாவுக்கு தெரியவந்துள்ளது.

இதில் கனகா மிகவும் மனமுடைந்து போனாராம். தன்னை உண்மையாக நேசித்த ஒருவரை ஒதுக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி அவரை வாட்டியது. அம்மாவும் இல்லை.. அவரும் இல்லை.. இனிமேல் நான் ஏன் சினிமாவில் நடிக்க வேண்டும் என கனகா முடிவெடுத்தார். அதன்பின்னர் அவர் சினிமாவிலும் நடிக்கவில்லை. அந்த வீட்டிலிருந்தும் வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேல் அவரின் வீட்டில் தனியாகவும், மர்மமாகவும் கனகா வசித்து வருகிறார்.

இந்த தகவலை தமிழ் திரையல்கில் பல வருடங்களாக இருக்கும் செய்தியாளர் செய்யாறு பாலு யுடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.