காதல் திருமணம்.. பாசமான கணவர்!.. மனைவியிடம் இருந்த செண்டிமெண்ட்!.. கவுண்டமணி பற்றி அறியாத தகவல்…

by சிவா |   ( Updated:2025-05-05 08:31:44  )
goundamani
X

#image_title

Goundamani: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி(67) இன்று காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உலகை விட்டு பிரிந்துவிட்டார். இந்நிலையில், கவுண்டமணியின் மேனேஜர் மதுரை செல்வம் கவுண்டமணிக்கும், அவரின் மனைவி சாந்திக்கும் இடையே இருந்த அன்பு பற்றி பேசியிருக்கிறார்.

மனைவியின் இழப்பால் மனம் கலங்கி போயிருக்கிறார் கவுண்டமணி. கணவனும், மனைவியும் மிகவும் அந்நியோன்யமாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் மிகவும் பாசமாக இருப்பார்கள். சாந்தியை திருமணம் செய்த பின்னர்தான் சினிமாவில் நடிக்க துவங்கினார் கவுண்டமணி. சிலருக்கு திருமணத்திற்கு பின்னர்தான் ஏற்றம் வரும் என்பார்கள். அது கவுண்டமணி விஷயத்தில் அப்படியே நடந்தது.

#image_title

அதனால், மனைவி மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார். வீட்டிற்கு வந்தாலே ‘சாந்தி சாந்தி’ என பாசமாக கூப்பிட்டுகொண்டே இருப்பார். எவ்வளவு சம்பளம் வாங்கினாரோ அதை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிடுவார். வீட்டின் வரவு செலவு நிர்வகம், குழந்தைகளை படிக்க வைத்து திருமணம் செய்தது வரை எல்லாவற்றையும் அவரின் மனைவிதான் பார்த்துக்கொண்டார். வீட்டின் முதுகெலும்பே அவர்தான்.

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது செண்டிமெண்ட்டாக மனைவியின் கையில் இருந்து கொஞ்சம் காசு வாங்குவார் கவுண்டமணி. கவுண்டமணிக்கு செல்வி, ஸ்மிதா என இரண்டு மகள். இரண்டு மகள்களுக்கும் அம்மா மீது அதிக பாசம். சாந்தி அம்மாள் சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

#image_title

அவரின் மறைவு கவுண்டமணி சாருக்கு பெரிய இழப்பு. அவருக்கு நாங்கள் ஆறுதல் சொல்லி வருகிறோம். நாளை காலை 11 மணிக்கு சாந்தி அம்மாளின் இறுதிச் சடங்கு நடைபெறும்’ என அவர் தெரிவித்தார். சாந்தி அம்மாளின் மறைவு செய்தி கேட்டு நடிகர் செந்தில், சத்தியராஜ் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர்.

Next Story