Vettaiyan Movie: கடந்த ஒருவாரமாக விஜயின் கோட் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டத்தை கொடுத்து வந்த நிலையில் நேற்று அந்த கொண்டாட்டத்தை தவிடுபொடியாக்கியுள்ளது வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள். த.ச. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி , மஞ்சுவாரியார் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது.
லைக்காவை பொறுத்தவரைக்கும் வேட்டையன் திரைப்படம் ஒரு முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபகாலமாக லைக்கா தயாரிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சரியான லாபத்தை கொடுக்காத நிலையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டிருக்கிறது லைக்கா.
இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு எதிர்பார்த்த வசூலை பெற முடியவில்லை. அதனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படமாவது லைககாவிற்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
அந்த தேதியில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் ரஜினியின் வேட்டையன் வருவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருக்கிறார் ஞானவேல்ராஜா. இந்த நிலையில் வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது படக்குழு.
படத்திற்கு இசை அனிருத். பொதுவாக ரஜினி – அனிருத் காம்போனாலே அடிப்பொலிதான். அந்த வரிசையில் வேட்டையன் திரைப்படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனசிலாயோ என்ற அந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரஜினியும் மஞ்சுவாரியரும் சேர்ந்து ஆடுவது போல் பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு பாடலாகவே வெளிவந்திருக்கிறது. ஆனால் இந்த பாடல் வெளியாகி ரிலீஸாகி முழுசா ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் ரசிகர்கள் மனசிலாயோ பாடல் இன்னொரு படத்தின் பாடலின் காப்பி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதன் ஒரிஜினல் வெர்ஷனை பரவி வருகின்றனர்.
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரிலீஸான அஜகஜந்திரம் என்ற படத்தில் வரும் ஓலுலேரு பாடலின் காப்பி என ரசிகர்கள் பரப்பிவருகின்றனர். ஆனால் கேட்பதற்கு இரண்டு பாடல்களுமே ஒரே பீட்டில் வருவது போலத்தான் தெரிகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/WizzGod01/status/1833128263449026939
