Mandaadi: சர்தார் 2-வை போட்டு தள்ளிய மண்டாடி!.. சூரியிடம் தோற்ற கார்த்தி!…

X
Mandaadi: சர்தார் 2-வை போட்டு தள்ளிய மண்டாடி!.. சூரியிடம் தோற்ற கார்த்தி!…

பல திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்திருந்த சூரி விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கினார். அந்த படத்தில் சூரியன் நடிப்பு பாராட்டை பெற்றதோடு படமும் நல்ல வசூலை பெற்றது. அதைத் தொடர்ந்து சூரியின் நடிப்பில் கருடன், மாமன், விடுதலை 2 ஆகிய படங்கள் வெளியானது..

இந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு வசூலையும் பெற்றது. இந்நிலையில்தான், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த மண்டாடி திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகமெங்கும் வெளியானது..

மீனவர்களின் வாழ்க்கை மற்றும் கடலில் நடத்தப்படும் படகு போட்டியை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் தொடக்கம் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தற்போது படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் மண்டாடி திரைப்படம் 47 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..

ஒருபக்கம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து உருவான சர்தார் 2 திரைப்படமும் கடந்த 10ம் தேதி மண்டாடி படத்திற்கு போட்டியாக வெளியானது. ஆனால் இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றது. கடந்த படம் வெளியாகி நான்கு நாட்களில் சர்தார் 2 திரைப்படம் 18 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சர்தார் 2-வை விட மண்டாடி திரைப்படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது..