2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் கெளதம் மேனன். முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் இயக்க துவங்கினார்.
இறுதியாக அவரது இயக்கத்தில் சிம்பு நடித்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. தற்சமயம் பல படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார் கெளதம் மேனன். சமீபத்தில் வெளியான பத்து தல திரைப்படத்தில் கூட வில்லனாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்தை பார்த்துதான் சினிமாவிற்கு வந்தார் கெளதம் மேனன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராவதற்காக வெகுவாக முயற்சித்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தனியாக திரைப்படம் எடுப்பது என முடிவு செய்தார் கெளதம் மேனன்.
படத்தை விமர்சித்த மணிரத்னம்:
அப்படியாக மின்னலே படத்தின் கதையும் தயாரானது. அதில் நடிப்பதற்கு மாதவனும் ஒப்புக்கொண்டார். ஆனால் இது காதல் கதையாக இருப்பதால் ஒருமுறை மணிரத்னத்திடம் போய் கதையை சொல்லுங்கள். அவருக்கு பிடித்திருக்கிறதா பார்ப்போம் என கூறியுள்ளார் மாதவன்.
அதில் கெளதம் மேனனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவர் மணிரத்னத்திடம் கதையை கூறியுள்ளார். அதை கேட்ட மணிரத்னம் இந்த கதை நன்றாக இல்லை. எனக்கு பிடிக்கலை என கூறியுள்ளார். கெளதம் மேனனுக்கு இது மிகுந்த அவமானமாகியுள்ளது.
இருந்தாலும் அவர் அதை படமாக்கினார். படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இதுக்குறித்து கெளதம் மேனன் ஒரு பேட்டியில் கூறும்போது என்னை பழிவாங்குறதுக்குன்னே மாதவன் பண்ணுன வேலை அது என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்.. வெங்கட்பிரபு படத்தின் கதை இதுதானாம்… ஓ இப்படி ஒரு ப்ளான் இருக்கா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…