என்னடா வாழ்க்கை வாழுற? பயந்துகிட்டுதானே வெளியே வரமாட்டேங்குற? அஜித்தை பந்தாடும் தயாரிப்பாளர்

by Rohini |
mani
X

mani

சமீபகாலமாக இணையத்தில் ஒரு ஹாட் டாப்பிக்காக உலா வரும் செய்தியாக அஜித் மற்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பற்றிய செய்திதான். ஒருபக்கம் அஜித்தை தல தல என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மாணிக்கம் நாராயணனால் அஜித்தின் பேரும் புகழும் கடந்த இரண்டு நாள்களாக சிதைந்து கொண்டிருக்கின்றன.

அதாவது 1997 ஆம் ஆண்டில் அஜித்தின் அம்மா , அப்பா மலேசியா மற்றும் சிங்கப்பூர் செல்வதற்காக மாணிக்கத்திடம் அஜித் ஒரு 6 லட்சம் கடனாக கேட்டு பெற்றுக் கொண்டாராம். அதில் 2 லட்சத்தை செக்காகவும் மீதி 4 லட்சத்தை டிடியாகவும் கொடுத்தாராம். அந்தப் பணத்தை அஜித் தான் பெரிய நடிகனாக வந்த பிறகு உங்களுக்காக ஒரு படம் நடித்துக் கொடுப்பதன் மூலம் அடைத்து விடுகிறேன் என்று சொன்னாராம்.

mani1

mani1

ஆனால் இன்று வரை அந்தப் பணத்தை கொடுக்கவில்லையாம். ஒரு கட்டத்தில் மாணிக்கம் அந்தப் பணத்தை போய் கேட்க செக் நம்பர் என்ன என்று கேட்டாராம். அந்த சமயம் அவருக்கு தெரியவில்லையாம். ஆனால் மாணிக்கத்தின் நல்ல நேரம் அவருடைய ஐடியில் அஜித்துக்கு பணம் கொடுத்ததாக காட்டப்பட்டிருந்ததாம்.

இப்பொழுது அதற்கான ஆதாரம் மாணிக்கத்திடம் இருப்பதாக கூறினார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அஜித்தை கண்டபடி திட்டி பேசியிருக்கிறார். மனுஷன்னா நாலுபேரை வெளியில் வந்து சந்திக்கனும், இவன் வாழுறதெல்லாம் ஒரு வாழ்க்கையா? இவனால சுரேஷ் சக்கரவர்த்தி செத்தே போயிட்டான். அவருக்கு அஜித் என்ன செஞ்சான்? என்று தாறுமாறாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் இப்படி பயந்துகிட்டே ஓடி ஓடி உள்ளேயே வாழ்ந்துகிட்டு எத்தனை நாள் இருப்பாரு? என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடமும் கெஞ்சி ஒரு படம் நடித்தாராம் அஜித். அந்தப் படமும் ஓடாமல் ரத்னத்திற்கு பெரிய அடியாம். அந்தப் படத்திற்காக ரத்னம் மாணிக்கத்திடம்தான் பணத்தை வாங்கினாராம்.

mani2

mani2

மேலும் ரெட் படத்தின் டிஸ்ட்ரிப்யூசனை மாணிக்கத்திடம் வாங்க சொன்னாராம் அஜித். முதலில் மாணிக்கம் வாங்க மாட்டேனு சொன்னாராம். ஆனால் அஜித் மிகவும் கெஞ்சினாராம். இருந்தாலும் 40 லட்சத்திற்கு வாங்கினாராம். ஆனால் அந்தப் படம் பெரிய ஃப்ளாப். ஆனால் அதற்காக சுரேஷ் சக்கரவர்த்தி 10 லட்சம் பணத்தை மாணிக்கத்திடம் கொடுத்துவிட்டாராம். இப்படி அஜித்தை பற்றி மாணிக்கம் பேசும் பேச்சு இப்பொழுது இணையத்தையே அதிரவைத்துக் கொண்டு இருக்கின்றது.

இதையும் படிங்க : கஷ்டப்பட்டு வந்தவங்களுக்குத்தான் தெரியும்.. என் வலியை புரிஞ்சுக்கிட்டு அஜித் வந்தாரு! இயக்குனரின் சோகம்

Next Story