‘கூலி’ என்னோட டைட்டில்! லோகேஷ் என்னிடம் எதுமே கேக்கல.. இதோ ஸ்டார்ட் ஆயிடுச்சே பிரச்சினை

by Rohini |   ( Updated:2024-04-30 08:45:15  )
coolie
X

coolie

Coolie Movie: ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராக போகும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏற்கனவே லோகேஷின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவல் இருக்கத்தான் செய்யும். அதிலும் ரஜினியுடனான கூட்டணி என்பது இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்கு ஏற்ற வகையில் இந்த டீசரும் அமைந்துள்ளது. குறிப்பாக ரஜினியின் முந்தைய படங்களின் ரெபரன்ஸ்களை லோகேஷ் இந்த படத்தில் பயன்படுத்தி இருப்பது இன்னும் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக சம்போ சிவ சம்போ பாடலில் வரும் வரிகள் இந்த படத்தில் வசனங்களாக ரஜினி பேசி இருப்பது ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: நேத்து ராத்திரி யம்மா!.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் செய்யுறாரு பாருங்க!..

இந்த நிலையில் இந்த கூலி படத்தின் டைட்டில் என்னுடையது என ஒரு பிரபல தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சரத்குமார் நடிப்பில் வெளியான கூலி படத்தை தயாரித்த மாணிக்கம் நாராயணன். ஒரு பேட்டியில் அவர் கூறும் போது கூலி என்ற பெயரில் ஏற்கனவே நான் படத்தை தயாரித்தேன். இப்போது ரஜினியை வைத்து அதே டைட்டிலில் படம் எடுக்கிறார் லோகேஷ்.

mani

mani

ஆனால் இதைப் பற்றி லோகேஷ் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து எனக்கு போன் வந்தது. எனக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் ஒருவித தொடர்பு இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து என்னிடம் கேட்டார்கள்.

இதையும் படிங்க: இதெல்லாம் பார்த்தா விஷாலுக்கு எரியுமா?.. எரியாதா?.. 2வது சன்டேவிலும் மொத்த தியேட்டரும் ஆடுதே!..

நான் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன். அதேபோல் எங்களுக்குள் எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் இதுவரை போடப்படவில்லை. ஏனெனில் அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. கண்டிப்பாக அதற்கு பதிலாக காம்பன்சேஷன் ஒரு நாள் கொடுப்பார்கள் என கூறியிருக்கிறார்.

Next Story