ஒழுங்கா பெட்டிக் கடை வச்சி பிழைச்சுக்கோ- ஜெய் பீம் மணிகண்டனை மிரட்டிய துணை நடிகர்?
நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மட்டுமல்லாது மிக சிறப்பான நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது ஒரு வசனக்கர்த்தாவும் கூட. “பீட்சா 2”, “விக்ரம் வேதா”, “விஸ்வாசம்”, “தம்பி”, “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகிய திரைப்படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.
நடிகர் மணிகண்டன் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் “ஜெய் பீம்” திரைப்படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள். “ஜெய் பீம்” திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “குட் நைட்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “குட் நைட்” திரைப்படத்தில் நடித்த மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகியோர் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு பேட்டிக்கொடுத்தனர். இருவரும் பல காலமாக மிகச் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகின்ற நிலையில் நிருபர் மணிகண்டனிடம், ரமேஷ் திலக்கை குறித்து சில வார்த்தைகளை கூறுமாறு கேட்டார்.
அதற்கு மிகவும் கலகலப்பாக பதிலளித்த மணிகண்டன், “ரமேஷ் திலக்கிடம் மிகச் சிறந்த விஷயமாக நான் பார்ப்பது பாஸிட்டிவிட்டி. எதாவது படத்தில் நான் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தால் கூட ரமேஷ்தான் எனக்கு முதலில் தொலைப்பேசியில் அழைப்பார். ‘படம் பார்த்தேன் நல்லா நடிச்சிருக்க’ என அவரால் சொல்ல முடியும். ஆனால் ரமேஷ் அப்படி சொல்லமாட்டார்.
ஜெய் பீம் படம் வெளிவந்தபோது அவர் நெஞ்சுக்கு நீதி ஷூட்டிங்கில் இருந்தார். அங்கிருந்து எனக்கு ஃபோன் செய்தார். ‘ஏய், என்னது அது ஏதோ படம் பண்ணிக்கிறியாம். ஏரியால உன்ன பத்தித்தான் பேசிகிட்டு இருக்குறாங்க. இங்க பார் உனக்கு நல்ல முறையா சொல்றேன். நான் சென்னைக்கு வரும்போது நீ எதாவது பெட்டி கடை வச்சிட்டு செட்டில் ஆகிடனும். இனி ஷூட்டிங்க்ல எங்கயாவது பார்த்தேன் உன்ன” என கூறுவார். இது ரமேஷின் காதல் மொழி. இது மாதிரி பேசிதான் நம்மை ஊக்குவிப்பார்” என சிரித்துக்கொண்டே கூறினார். இவ்வாறு அந்த பேட்டி முழுக்கவே கலகலப்பாகவே இருந்தது.
இதையும் படிங்க: பிரச்சினை இதுதான்! மகாலட்சுமி பிரிவை குறித்து ஃபேட்மேன் ரவி ஓப்பன் டாக்