விஜய்சேதுபதியின் அந்த ஹிட் படத்துக்கு வசனம் எழுதினது நம்ம மணிகண்டனா?!.. மனுஷன் அசால்ட் பண்றாரே!..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கவனிக்கப்படும் நடிகராக மாறியிருப்பவர் மணிகண்டன். குட் நைட் படம் மூலம் இவர் அதிகம் பிரபலமாகியிருந்தாலும் பல வருடங்களாக சினிமாவில்தான் இயங்கி வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் மிமிக்ரி கலைஞர், யுடியூப் சேனல் என பலவற்றையும் செய்து வந்தார்.
தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ என சொல்லப்படும் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். ரேடியோ ஜாக்கியாவும் வேலை செய்துள்ளார். பல டிவி மற்றும் சினிமாக்களில் நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க…? நடிகைக்காக கோபத்தில் எகிறிய கமல்ஹாசன்… ஸ்பெஷலோ..!
8 தோட்டாக்கள் படத்தில் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. விஜய் சேதுபதியுடன் இவருக்கு நல்ல நட்பு உண்டு. விக்ரம் வேதா படத்தில் ஒரு சின்ன வேடத்திலும் நடித்திருப்பார். காலா படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருப்பார். சில்லு கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண் ஆகிய படங்களிலும் மணிகண்டன் நடித்திருக்கிறார்.
ஆனால், ஜெய்பீம் படத்தில் அவர் ஏற்ற ராஜாகண்ணு கதாபாத்திரம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தி்ற்காக சிறந்த நடிகருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தளபதி பேரை அசிங்கப்படுத்திய ரோகிணி தியேட்டர்!.. சீட்டை ஒடச்சிட்டு என்ன அழகா சீன் போடுறாரு விஜய் விசிறி!..
மணிகண்டனை மிமிக்ரி கலைஞராகவும், நடிகராகவும் மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், அவர் நன்றாக வசனம் எழுதுவார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாதவன் நடித்து வெளியான விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியது மணிகண்டன்தான் என்பது பலருக்கும் தெரியாது.
அதேபோல், அஜித் நடித்து சூப்பர் ஹிட் அடித்த விஸ்வாசம் படத்திலும் சில காட்சிகளுக்கு மணிகண்டன் வசனம் எழுதியிருக்கிறார். இன்று நேற்று நாளை படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். நரை எழுதும் சுயசரிதம் என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். ஆனால், இது தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பார்ட் 2-ன்னு சொல்லி பங்கம் பண்ணிய படங்கள்! வேட்டையனை பாலையாவாக மாற்றிய சந்திரமுகி 2வை மறக்க முடியுமா?..