பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்...
by சிவா |
X
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பாடியவர் மாணிக்க விநாயகம். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே மெகா ஹிட். பாடுவதோடு மட்டுமில்லாமல் திருடா திருடி, கம்பீரம், கிரி, திமிறு, சந்தோஷ் சுப்பிரமணியம், வேட்டைக்காரன், பலே பாண்டியா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்தார். ஏராளமான பக்தி பாடல்களையும் இவர் பாடியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படங்களில் பாடவும் இல்லை. நடிக்கவும் இல்லை. இதயக்கோளாறு காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்த அவர் இன்று மாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 73.
அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story