Categories: Entertainment News

ஐச்சச்சோ…என்னாச்சு…? விஜய் டிவி மணிமேகலையின் நிலைமையை பார்த்து பரிதாபப்படும் நெட்டிசன்கள்..!

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கிய மணிமேகலை அஞ்சனாவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆங்கராக இருந்த மணிமேகலை உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பணியாற்றி வரும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று நகைச்சுவை செய்து ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டோம் என்பதற்காக அவர்கள் முன் நன்றாக வாழவேண்டும் என முயற்சித்து தனது முயற்சியில் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார்.

தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரின் நகைச்சுவையை பிரபலங்கள் உட்பட ரசிக்க தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு பிரபலமாகி விட்டார். மேலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாவிலும் பல ரசிகர்களை கொண்டுள்ள மணிமேகலை சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஒரு மாட்டின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு எதையோ யோசிப்பது போல உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். கூடவே ஒரு மோட்டிவேஷன் வசனத்தையும் பதிவிட்டுள்ளார்.

Published by
Rohini