பேரு புகழை விட சுயமரியாதை முக்கியம்... CWC-லிருந்து வெளியேறிய மணிமேகலை...!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக மணிமேகலை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
சன் மியூசிக்கில் விஜேவாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை. பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் அறிமுகமானார். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. இவர் வீட்டை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய மணிமேகலை யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது குடும்பத்துடன் மற்றும் கணவருடன் இருக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டு பிரபலமான இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அசத்தினார்.
முதல் நான்கு சீசன் வரை கோமாளியாக அசதி வந்த இவர் அதன்பிறகு குக்கு வித் கோமாளி 5-வது சீசனில் ஆங்கராக வந்து கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது "குக் வித் கோமாளியின் ஒரு பகுதியாக நான் இல்லை.
மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணரும் எப்பொழுதும் 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொண்டு வேலை செய்கிறேன். 2019 நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தனது பயணம் தொடங்கியது. ஆனால் சுயமரியாதையை விட எதுவும் முக்கியமானது இல்லை. என் வாழ்க்கையின் எல்லா நிலையிலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றுவேன்.
புகழ், தொழில் வாய்ப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கின்றது. குறிப்பாக அவர் போட்டியாளர் என்பதை மறந்து விட்டு தன்னுடைய பணியில் குறுக்கிடுகின்றார்.
என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கீடு செய்கின்றார். நமது உரிமை கேட்பதும் கேள்வி எழுப்புவதும் கூட இந்த உலகத்தில் குற்றமாகி விடுகின்றது. ஆனால் எப்போதும் எனக்கு எது சரியானதோ? அதை மட்டும் தான் செய்வேன் நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
பல எதிர்மறை மற்றும் ஆதிக்கம் நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கின்றது. நான் முன்பு மகிழ்ச்சியாக வேலை செய்த குக் வித் கோமாளி தற்போது இல்லை. அதனால் இனி அதன் பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை. 15 வருடங்களாக ஆங்கராக இருக்கிறேன். ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் இது போன்ற சம்பவங்கள் எனக்கு நடந்தது இல்லை. சீசன் 1 முதல் இந்த சீசன் வரை பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மணிமேகலை தெரிவித்து இருக்கின்றார்.