Categories: latest news

பேரு புகழை விட சுயமரியாதை முக்கியம்… CWC-லிருந்து வெளியேறிய மணிமேகலை…!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக மணிமேகலை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார்.

சன் மியூசிக்கில் விஜேவாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை. பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் அறிமுகமானார். இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது. இவர் வீட்டை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய மணிமேகலை யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது குடும்பத்துடன் மற்றும் கணவருடன் இருக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டு பிரபலமான இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு அசத்தினார்.

முதல் நான்கு சீசன் வரை கோமாளியாக அசதி வந்த இவர் அதன்பிறகு குக்கு வித் கோமாளி 5-வது சீசனில் ஆங்கராக வந்து கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “குக் வித் கோமாளியின் ஒரு பகுதியாக நான் இல்லை.

மிகுந்த நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணரும் எப்பொழுதும் 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் கொண்டு வேலை செய்கிறேன். 2019 நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தனது பயணம் தொடங்கியது. ஆனால் சுயமரியாதையை விட எதுவும் முக்கியமானது இல்லை. என் வாழ்க்கையின் எல்லா நிலையிலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றுவேன்.

புகழ், தொழில் வாய்ப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கின்றது. குறிப்பாக அவர் போட்டியாளர் என்பதை மறந்து விட்டு தன்னுடைய பணியில் குறுக்கிடுகின்றார்.

என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கீடு செய்கின்றார். நமது உரிமை கேட்பதும் கேள்வி எழுப்புவதும் கூட இந்த உலகத்தில் குற்றமாகி விடுகின்றது. ஆனால் எப்போதும் எனக்கு எது சரியானதோ? அதை மட்டும் தான் செய்வேன் நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

பல எதிர்மறை மற்றும் ஆதிக்கம் நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கின்றது. நான் முன்பு மகிழ்ச்சியாக வேலை செய்த குக் வித் கோமாளி தற்போது இல்லை. அதனால் இனி அதன் பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை. 15 வருடங்களாக ஆங்கராக இருக்கிறேன். ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் இது போன்ற சம்பவங்கள் எனக்கு நடந்தது இல்லை. சீசன் 1 முதல் இந்த சீசன் வரை பணி புரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மணிமேகலை தெரிவித்து இருக்கின்றார்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago