சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவர் மணிமேகலை – ஹூசைன். இவர்களது கலகலப்பான பேச்சும், நகைச்சுவையான பதிவுகளும் எப்போதும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன தங்களது பைக் குறித்து மணிமேகலை பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தமிழ் டிவி தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் காதலித்து, தங்கள் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இவ்ர்க்ளது நகைச்சுவையான பேச்சு பலராலும் ரசிக்கப்படுவது உண்டு.
மணிமேகலை மற்றும் ஹூசைன் தம்பதியினர் திருமணத்திற்குப் பிறகு தங்களது முதல் சொத்தாக KTM RC 200 என்ற ஸ்போர்ட்ஸ் பைக்கை ஆசையாக வாங்கினர். ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அசோக் நகரில் உள்ள நண்பர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பைக் அதிகாலையில் திருடுபோனது. இது குறித்து சிசிடிவி காட்சிகளுடன் மணிமேகலை அப்போது உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

பைக் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த பைக் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக மணிமேகலையின் மொபைலுக்கு அந்தப் பைக்கிற்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பு தொடர்பான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப் கண்ட மணிமேகலை, அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கீழ்கண்டவாறு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
திருட்டுப்போன KTM பைக்குக்கு இன்சூரன்ஸ் எக்ஸ்பைரி மெசேஜ் எனக்கு வருது! இன்சூரன்ஸ் கூட புதுப்பிக்காம எங்கேயோ ஓட்டிட்டு இருக்கான் பாவிப் பய! கண்ணுலயே சிக்க மாட்டேங்குறான்… எனத் பதிவிட்டுள்ளார்.
மணிமேகலையின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், அந்தத் திருடன் இன்னும் வண்டிய பத்திரமா தான் வச்சிருக்கான் போல, அவன் மேல கேஸ் போடாம இன்சூரன்ஸ் போடச் சொல்லி மெசேஜ் அனுப்புங்க மணிமேகலை என நகைச்சுவையான கமெண்ட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.





