’பொன்னியின் செல்வன்’ புரோமோஷன்...! கறாரா ஆர்டர் போட்ட மணிரத்னம்... கேள்விக்குறியாகும் விக்ரம் தரப்பு...?
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார் போன்றோர் நடிப்பில் தயாராகி ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கும் படம் பொன்னியின் செல்வன். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக எடுக்க ஆசைப்பட்ட கதையை தற்போது மணிரத்னம் நிஜமாக்கியுள்ளார்.
படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கோலாகலமாக வெளியானது. திரையுலகை சார்ந்த பலரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்த மணிரத்னம் தயாராகி விட்டார். படம் ஒரு பேன் இந்தியா படமாக இருப்பதால் வெவ்வேறு மாநிலத்திற்கு சென்று புரோமோஷன் வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து புரோமோஷன் வேலைகளில் ஈடுபடப்போகிறாராம்.
இதற்காக அதில் நடித்த முன்னனி நடிகர்களிடம் செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து ஒரு மாதம் வரைக்கும் எதாவது வேலை இருந்தால் தள்ளி வைத்து விடுமாறு கூறியுள்ளாராம். முழுமூச்சாக புரோமோஷன் வேலைகளில் ஈடுபடவேண்டும் என ஜெயம் ரவி,கார்த்தி, திரிஷா இவர்களிடம் பேச்சு வார்த்தை முடித்து விட்டாராம். இன்னும் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிகிறது. ஆனால் இதற்கு நம்ம சீயான் என்ன சொல்லப்போகிறார் என தெரியவில்லை.இதற்கிடையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு தனது புது கெட்டப்பை சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டார். சூட்டிங்கை தவிர்ப்பாரா? இல்லையா?