கல்யாணத்தில் விருப்பமில்லாத மணிரத்னம்!.. சுஹாசினி செய்த ராஜதந்திரம் என்ன தெரியுமா?..

by Rohini |   ( Updated:2023-03-26 11:31:13  )
mani
X

manirathnam

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மணிரத்னம். பொதுவாகவே 5 வருடத்திற்கு மேலாக சினிமாவில் ஒரு இயக்குனர் தாக்குப் பிடிப்பதே கஷ்டம். ஆனால் மணிரத்னம் காலத்திற்கு ஏற்ப தன் படங்களை ரசிகர்களுக்காக கொடுத்துக் கொண்டே வருகிறார்.

காலத்தின் ஆழத்தை மிகத் தெளிவாக ரசிக்கும் படியாக கொடுப்பதில் மணிரத்னத்தை தவிர வேறு எவராலும் முடியாது. இவரின் பெரும்பாலான படங்களை எடுத்துக் கொண்டால் காதலின் முக்கியத்துவத்தையும் காதலால் ஏற்படும் வலியையும் அழகாக சித்தரித்திருப்பார்.

mani1

manirathnam

கிட்டத்தட்ட இப்போது உள்ள பல இயக்குனர்களின் ரோல்மாடலே மணிரத்னம் தான். ஒரு மாஸ் நடிகருக்கு உள்ள ரசிகர் பட்டாளத்துக்கு இணையான ரசிகர்களை மணிரத்னம் வைத்துள்ளார். மேலும் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இன்று ஒரு இயக்குனர் ஜாம்பவனாக வளர்ந்து நிற்கிறார்.

நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்ட மணிரத்னம் கதை விவாதித்தலில் தன் மனைவியையும் அவ்வப்போது இணைத்துக் கொள்வார். இந்த நிலையில் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளார் மணிரத்னம்.

mani2

manirathnam

ஆகவே தனக்கு விருப்பமில்லை என்பதை சுஹாசினி வீட்டில் சொல்ல சென்றாராம் மணிரத்னம்.ஆனால் வீட்டில் அவருடைய பெற்றோர்கள் இல்லாமல் சுஹாசினி மட்டும் இருந்துள்ளாராம். வீட்டிற்கு போன மணிரத்னம் சுஹாசினியிடம் கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : நான் சொன்னா கேட்கமாட்டார்!. ஆனா அவர் சொன்னா கேட்பார்!.. புலம்பிய அஜித் அப்பா…

பேசிய அந்த கொஞ்ச நேரத்திலேயே சுஹாசினியை பிடித்து விட்டதாம். மேலும் அன்று சுஹாசினி வீட்டில் ரசம் சாதம் மற்றும் உருளைக் கிழங்கு பொரியல் மட்டும் வைத்திருக்கின்றனர். அதை மட்டும் சாப்பிட்டாராம் மணிரத்னம். அதுவும் மிகவும் விரும்பி சாப்பிட்டாராம். அதன் பிறகே அவர்கள் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

Next Story