என்கிட்ட உன் வேலை பலிக்காது!.. மணிரத்னம் செஞ்ச வேலையில் ஆடிப்போன சிம்பு...

by சிவா |
simbu
X

Actor simbu: தமிழ் சினிமாவின் நிஜமான சகலகலா வல்லவன் டி.ராஜேந்திரனின் மூத்தமகன் சிலம்பரசன். சிம்பு என்கிற பெயரில் இவரை சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வைத்தர் டி.ஆர். சின்ன வயதிலேயே பல ஹிட் படங்களை கொடுத்தார் சிம்பு. அதன்பின் மீசை வளர துவங்கியதும் ‘காதல் அழிவதில்லை’ என்கிற படம் மூலம் சிம்புவை ஹீரோ ஆக்கினார் டி.ஆர்.

இந்த படம் 2002ம் வருடம் வெளியானது. அதன்பின் இப்போது வரை 20 வருடங்களாக சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார். நன்றாக நடனம் ஆடுவார். பாட்டு பாடுவார், பாடல் எழுதுவார். அதுமட்டுமல்ல. எடிட்டிங், இசை, இயக்கம் என எல்லாமே சிம்புவுக்கு அத்துப்படி. அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் இருக்க வேண்டிய இடம் வேறு.

இதையும் படிங்க: அஜித்தே சூட்டிங் போய்டாப்ல! உனக்கு என்ன தலைவா? கைவிடப்பட்டதா சிம்புவின் ப்ராஜக்ட்?

ஆனால், சோம்போறித்தனம் கரணமாகவே அந்த இடத்தை இழந்ததோடு, பல புகார்களுக்கும் ஆளானர். அதிகாலை சீக்கிரம் எழுந்து காலை 7 மணிக்கெல்லாம் ஷூட்டிங் போவது சிம்புவின் பழக்கத்திலேயே கிடையாது. இயக்குனர் 7 மணிக்கு வரசொன்னால் 11 மணிக்குதான் போவார். சில நாட்கள் அதுவும் போகாமல் அடுத்தநாள் போவார். சில சமயம் சில நாட்கள் கழித்து கூட போவார். எனவே, சிம்பு சரியாக படப்பிடிப்பு வரமாட்டார் என்கிற புகாரை பலரும் கூறினார்கள்.

ஆனாலு, அவ்வப்போது சில ஹிட் படங்களை கொடுத்து விடுவதால் சிம்புவின் மார்க்கெட் அப்படியே இருக்கிறது. மணிரத்னம் படத்தில் சிம்பு நடித்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம். படப்பிடிப்பில் டெடர் போல இருப்பார் மணிரத்னம். காலை 7 மணிக்கு முதல் காட்சியை எடுத்துவிடுவார்.

இதையும் படிங்க: இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?

சிம்புவை பற்றி மணிரத்தினத்திற்கும் தெரியும் என்பதால் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது அதிகாலை 4 மணிக்கு சிம்புவின் வீட்டின் முன்பு காரோடு நிற்பாராம் மணிரத்னம். ஐயோ மணி சாரே வந்துட்டாரே என்கிற பதட்டத்தில் வேகமாக எழுந்து ரெடியாகி அவருடன் படப்பிடிப்புக்கு போய்விடுவாராம் சிம்பு.

இப்படி சிம்புவை அதிகாலை எழ பழக்கியவர் மணிரத்னம் மட்டுமே. அதோடு, சிம்புவுக்கு நல்ல அறிவுரைகளை கூறி அவரை நல்வழிக்கு கொண்டுவந்தவரும் மணிரத்தினம்தான் என விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். பொன்னியில் செல்வன் படத்தில் கூட சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் சிம்பு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்கள வச்சி படம் பண்ண முடியாது!. விஜய்க்கு ‘நோ’ சொல்லிவிட்டு சிம்புவிடம் போன இயக்குனர்!…

Next Story