இவ்ளோ கொடூரமானவரா...? 9 மாத கர்ப்பிணிக்கு தொல்லை கொடுத்த மணிரத்னம்...!
புதுமையான காதல் களம், சுருக்கமான வசனம் கொண்ட ஒரு பிரம்மாண்ட படத்தை உருவாக்க முடியும் என்றால அது மணிரத்னம் என்ற இன்னொரு பிரம்மாண்டத்தால் மட்டுமே முடியும். தமிழ் சினிமாவிற்கு ஏராளமான காதல் கதைகளை கொண்ட வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
காதல் படங்களின் திரைக்கதைக்கு இலக்கணம் வகுத்தவர். இவரின் மௌனராகம், நாயகன் போன்ற படங்கள் காலம் பேசும் காவியமாக போற்றப்படுகிறது. இதை தொடர்ந்து 1990ஆம் ஆண்டு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்து “அஞ்சலி” என்ற படத்தை இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து மாதவன் ஷாலினி வைத்து இயக்கிய “அலைபாயுதே” இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் காதல் அலை பாய்ந்த வண்ணம் இருக்கிறது. இவரின் பிரம்மாண்டத்துடன் துணையாக கூடவே வருபவர் இசைப்புயல் ஏஆர். ரகுமான் உட்பட. இவர்கள் இருவரின் இணைப்பிலயே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் பிரசாந்த் நடிப்பில் வெளியான திருடா திருடா படத்தில் ஹீராவிற்கு ட்ப்பிங் சுஹாசினிதான் பேசியிருப்பார்.அப்போது சுஹாசினி 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். காட்சியில் ஹீரா கத்தி பேசுவது மாதிரியான சீன் இடம் பெறும்.டப்பிங்கில் சுஹாசினி மிகவும் கஷ்டப்பட்டதாக கூறினார். கோபத்தில் மணிரத்னத்தை சில சமயம் திட்டினாராம். மணிரத்னமோ என்ன பண்றது மனைவியாக போய்விட்டாள். ஒன்றும் செய்ய முடியாதுனு இருந்துருவாராம்.