படம்தான் தக் லைஃப்!.. நிஜத்தில் காஸ்ட்லி லைஃப்!. மணிரத்னத்தின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?!..

Published on: March 11, 2024
manirathnam
---Advertisement---

தமிழ் சினிமாவின் தரத்தை தொழில்நுட்ப ரீதியாக உயர்த்தியவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய மௌன ராகம் படத்தை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். வசனங்களால் இயங்கி வந்த சினிமாவை காட்சி அழகியல் மூலம் வேறுமாதிரி காட்டியவர் இவர். இவர் படங்களில் வசனங்களெல்லாம் ரத்தின சுருக்கம்தான்.

நாயகன் எனும் கிளாசிக் படத்தை கொடுத்து மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பின் அவர் பல திரைப்படங்களை இயக்கியிருந்தார்லும் அஞ்சலி, ரோஜா, பம்பாய், இருவர், அலை பாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: முடி வளர்த்தது வேஸ்டா போச்சே! டிராப் ஆகுமா STR 48 படம்? மீண்டும் டாட்டா காட்டிய சிம்பு

இந்திய அளவில் நம்பர் ஒன் இயக்குனராக பல வருடங்கள் இருந்தவர் இவர். தமிழ் சினிமாவில் உள்ள பல இயக்குனர்கள் மணிரத்னத்தின் ரசிகர்கள்தான். மணிரத்னத்தின் நாயகன் படத்தை பார்த்துதான் தனது கேரியர் சினிமா என முடிவெடுத்தார் கவுதம் மேனன் என்பது பலருக்கும் தெரியாது.

Manirathnam1

எம்.ஜி.ஆரே எடுக்க முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்றவர் இவர். இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். துவக்கத்தில் மற்ற தயாரிப்பாளர்களின் பணத்தில் படமெடுத்து வந்த மணிரத்னம் ஒரு கட்டத்தில் வெற்றியோ, தோல்வியோ நமது பணமாக இருக்கட்டும் என சொந்த தயாரிப்பில் படங்களை எடுக்க துவங்கினார்.

இதையும் படிங்க: அந்த மாதிரி நடிக்க எங்க அப்பாவும் ஒரு காரணம்!.. பகீர் பேட்டி கொடுத்த ஷகிலா!..

பொன்னியின் செல்வன் படம் கூட லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார். இந்நிலையில், மணிரத்னத்தின் சொத்து மதிப்பு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என சொல்லப்படுகிறது. அதோடு, இதை நிர்வகிக்கும் பொறுப்பை மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் மணிரத்னம் ஒப்படைத்திருக்கிறாராம்.

எங்கு முதலீடு செய்யலாம். எதை வாங்கி போடலாம், காசை எப்படி இரட்டிப்பாக்கலாம் என எல்லாவற்றையும் அந்த நிறுவனம் செய்து வருகிறார்களாம். மணிரத்னம் படம் பெரிதாக ஓடாது. ஏ கிளாஸ் ஆடியன்ஸ் மட்டுமே பார்ப்பார்கள் என சொல்லும் நபர்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.