More
Categories: Cinema News latest news

“நல்லவேள விஜய் நடிக்கல…” நிம்மதியில் மணிரத்னம்… கடுப்பில் ரசிகர்கள்

மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக எடுக்க முடிவு செய்தார் மணிரத்னம். ஆனால் அப்போது அம்முயற்சி கைக்கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்துதான் கடந்த 2019 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. ஆனால் இடையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. எனினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.

Advertising
Advertising

மணிரத்னம் முதலில் “பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக எடுக்க முயன்றபோது வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் விஜய்யை தேர்வு செய்திருந்தார். அப்போது இது பெரிய விஷயமாக பேசப்பட்டது. விஜய் மணிரத்னத்துடன் முதன்முதலாக இணைகிறார் என்ற விதத்தில் ரசிகர்கள் உற்சாகமாகினர்.

ஆனால் 2019 ஆம் ஆண்டு கார்த்தி வந்தியதேவனாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மணிரத்னத்திடம் விஜய் நடிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம் “விஜய் நடிக்காமல் இருந்தது நல்லதுதான். ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் என்னால் இரண்டு பாகங்கள் எடுத்திருக்கமுடியாது. ஒரு பாகமாகத்தான் எடுத்திருக்கமுடியும்” என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் ரஜினிகாந்த் “நான் இத்திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்” என கூறினார். இது குறித்து அந்த பேட்டியில் கூறிய மணிரத்னம் ““அவர்பாட்டுக்குச் செல்லிவிட்டு போய்விட்டார். அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இந்த பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்திற்கு ரஜினியை நடிக்க வைத்திருந்தால் நான்தான் மாட்டிக்குவேன். ஏனென்றால் கதை வேறு மாதிரி மாறியிருக்கும்” என கூறினார். இதனை தொடர்ந்து தான் விஜய்யை குறித்தும் கூறியிருக்கிறார். மணிரத்னம் இவ்வாறு கூறியது இணையத்தில் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Arun Prasad

Recent Posts