இந்தியத் திரையுலகின் முக்கிய இயக்குநரான மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த தக் லைஃப் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு பின் மணிரத்னம் அடுத்த படத்திற்கு தயாரானார். இந்த முறை லைக்கா புரொடெக்சனுட்ன் கை கோர்த்து புதிய படத்தை தொடங்குகிறார்.
மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்திற்கு வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கப் போவதாகத் தொடக்கத்தில் சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானே இப்படத்திற்கும் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி என்றாலே பாடல்கள் செம ரகம்தான்.
இந்தப் படத்தை, முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கிஸ் (India Talkies) ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. மணிரத்னத்தின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கிஸ் பேனரின் கீழ் உருவாகும் 23-வது படைப்பாக இப்படம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்குநர் மணிரத்னமே தயாரிக்கிறார். தக் லைஃப் படம் கொடுத்த தோல்வியிலிருந்து மீள இப்படத்தை மணிரத்னம் இப்படத்தை வெற்றிபடமாக கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் லைக்காவிற்கு இப்படம் வெற்றியை கொடுக்கும் என்றே கூறலாம். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வ்ளிவந்த பொன்னியின் செல்வ்ன் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.





