Categories: Cinema News latest news

மணிரத்னம் வேண்டாம்…. வெற்றிமாறனுக்கு ஓகே.! அஜித் பட இயக்குனரின் அட்டகாசமான முடிவு.!

தமிழ் சினிமாவில் தான் எடுத்து வரும் ஒவ்வொரு திரைப்படமும் தரமானதாக , இந்திய சினிமாவில் முக்கியமான திரைப்படமாக தான் இருக்கும் என நிரூபித்து வருகிறார் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த திரைப்படம் முதலில் சூரியை வைத்து தொடங்கப்பட்டு, சிறிய பட்ஜெட் திரைப்படமாக உருவானது. அதன் பிறகு விஜய் சேதுபதி உள்ளே வந்தவுடன், அதன் கதைக்களம் தற்போது பெரிதாகி, விடுதலை 2 பாகங்களாக வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் –நீங்க நினைச்சது தப்பு…அந்த 2 ரஜினி படமும் பிளாப்தான்!…முக்கிய சினிமா பிரபலம் பகீர்… 

அதனால் அதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் லிஸ்டும் பெரிதாகி கொண்டே போகிறது. ஏற்கனவே, இதில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வந்தது. தற்போது இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் –இதுவரைக்கும் எந்த தமிழ் பாட்டுலயும் இந்த விஷயம் கிடையாது… நம்ம கேப்டன் அப்போவே மாஸ் கட்டிட்டார்…

ராஜீவ் மேனன், அஜித் , மம்முட்டி நடித்து நல்ல வெற்றியை பெற்ற கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தின் இயக்குனர் ஆவர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவன்றால், ராஜீவ் மேனன் தான் முதலில் ரோஜா படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது ஹீரோவாக நடிக்க விருப்பமில்லை  ஒளிப்பதிவு தான் என கூறி அதில் பல நல்ல படங்களை கொடுத்தவர் தான் ராஜீவ் மேனன். தற்போது வெற்றிமாறனின் விடுதலைக்கு ஓகே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Manikandan