தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு முன்னோடி என்று கூறுவதா? இந்திய சினிமாவில் ஆக்சிறந்த படைப்புகளில் இது முக்கியமானது என்று கூறுவதா? எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறுவதா என தெரியவில்லை அந்தளவுக்கு பல்வேறு மேஜிக்குகளை நாயகன் படம் சாத்தியமாகியுள்ளது.
உலகயநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் மணிரத்னம் சாத்தியமாகியுள்ளார். இந்த படம் வெளியாகி 35ஆண்டுகள் ஆனதை அடுத்து இந்த திரைப்படத்திற்கு பாராட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் வெற்றிமாறன் என பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், பேசிய நாயகன் இயக்குனர் மணிரத்னம், ‘ நான் இந்த இடத்தில் கமல்ஹாசனை மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இந்த இடத்திற்கு வரவில்லை. நான் அவரை மிஸ் செய்கிறேன்.’ என கூறியிருந்தார்.
இதையும் படியுங்களேன் – மாசத்துக்கு ஒருமுறையாவது விஜய் இதை செய்யணும்….கண்ணீர் விட்ட எஸ்.ஏ.சி…
உண்மையில், கமல் திரையுலகில் நாயகன் மிக முக்கிய மைல் கல் திரைப்படம் அதனால் அந்த 35 ஆண்டுகால விழாவிற்கு அவர் வந்திருக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. தமிழ் சினிமா இன்னும் 100 வருடம் கடந்தாலும் நாயகன் படத்தில் தாக்கம் ஆண்டாண்டு காலம் இருக்கும் என்பதே சினிமா விமர்சகர்களின் கருத்து.
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…