போதும் தம்பி இதோட நிறுத்திக்கோ!.. மணிரத்னத்தையே அதிரவைத்த சிம்பு!.. தக்லைப் அப்டேட்!..

by சிவா |   ( Updated:2024-07-19 05:26:55  )
simbu
X

சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என பட்டம் வைத்து பில்டப் செய்து ரசிகர்களிடம் பிரபலப்படுத்தினார் அவரின் அப்பா டி.ராஜேந்தர். சிறு வயது முதலே துறுதுறுவென வளர்ந்தவர்தான் சிம்பு. சிறுவனாக இருக்கும்போது சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடுவார்.

மகன் சிம்புவை பல படங்களிலும் நடிக்க வைத்து டி.ஆர் காதல் அழிவதில்லை படம் மூலம் அவரை ஹீரோவாக அறிமுகம் செய்தார். அதன்பின், மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மேலும் மெருகேற்றிகொண்டார் சிம்பு. ரஜினியை பின்பற்றி ஸ்டைல்களை பண்ண துவங்கினார்.

விரலில் பல வித்தைகளையும் காட்டினார். ஒரு கட்டத்தில் எல்லோரும் அதை ட்ரோல் செய்யவோ ஓவர் பில்ட்ப் செய்வதை நிறுத்திக்கொண்டர். ஒருபக்கம், படப்பிடிப்புக்கு சரியாக போகாமல் தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுத்தார். சிம்பு என்றால்படப்பிடிப்புக்கு தாமதமாகவே வருவார் என பலரும் சொல்ல துவங்கினார்கள்.

இதனால் சிம்புவுக்கு அதிக பட வாய்ப்புகள் போகவில்லை. அப்போதுதான் மன்மதன் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். அதை வைத்து அடுத்துடுத்து படங்களில் நடித்தார். மீண்டும் குடைச்சல்.. மீண்டும் புகார் என சிம்புவின் நடவடிக்கை மாறவே இல்லை. இவரால் சில தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தார்கள். அந்த பஞ்சாயத்தும் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், பிரியாணியாக சாப்பிட்டு உடம்பில் எடை கூடி அவரின் அப்பா டி.ஆர்.போல மாறினார். அந்த தோற்றத்திலேயே சில படங்களிலும் நடித்து ட்ரோலில் சிக்கினார். அதன்பின் மிகவும் கஷ்டப்பட்டு உடம்பை குறைத்து ஸ்லிம்மாக மாறி மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்தார்.

இப்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக சிம்புவை உடல் இளைக்க சொன்னாராம் மணிரத்னம். ஆனால், நாளுக்குநாள் உடல் இளைத்து மிகவும் மெலிந்து போன சிம்புவை பார்த்து அதிர்ந்து போன மணிரத்னம் ‘போதும் தம்பி.. இதுக்கு மேல் நீ உடம்பை இளைக்காதே. அசிங்கமாக இருக்கும்’ என சொன்ன பின்னரே இளைத்துக்கொண்டே போவதை நிறுத்தி இருக்கிறார் சிம்பு.

Next Story