மனிதரில் இத்தனை மனிதர்களா? திரையுலகில் வெற்றி நடைபோட்ட பின்னணி
மனிதர்களில் பல விதங்கள் உண்டு. நிறங்களின் அடிப்படையிலும் மொழியின் அடிப்படையிலும், நாடுகள் மற்றும் இருப்பிடங்களையும் அடிப்படையாகக் கொண்டு பிரிக்கின்றனர்.
உலகளவில் அப்படி பிரித்தாலும் இங்கு குணங்கள் மற்றும் சாதி, மதங்களின் அடிப்படையில் பலரும் பிரித்துப் பார்க்கின்றனர். மனிதர்கள் பறவைகள் போல தான். ஒவ்வொருவரும் ஒருவிதம். திரையுலகில் வேறுபட்டு நிற்கும் சில மனிதர்களைப் பற்றிப் பார்ப்போமா...
அவன் தான் மனிதன்
1975ல் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய படம். சிவாஜி, மஞ்சுளா, ஜெயலலிதா, முத்துராமன், சந்திரபாபு மற்றும் சோ உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். படம் சோக கீதம் பாடி முடிகிறது.
சிவாஜியின் நடிப்பு வழக்கம்போல் அசத்தல் தான். பாடல்கள் அனைத்தும் கச்சிதம். அன்பு நடமாடும், மனிதன் நினைப்பதுண்டு, ஆட்டுவித்தால் யாரொருவர் உள்பட பல ஹிட்டான பாடல்கள் இந்தப்படத்தில் உள்ளன.
உயர்ந்த மனிதன்
1968ல் கிருஷ்ணன் - பஞ்சு ஆகிய இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. ஏவிஎம் தயாரித்த இந்தப்படம் சிவாஜி ரசிகர்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது.
அற்புதமான நடிப்பை சிவாஜி வெளிப்படுத்தியிருந்தார். எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் செம. சிவாஜியுடன் வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி, சிவகுமார், பாரதி உள்பட பலர் நடித்துள்ளனர். அந்த நாள் ஞாபகம், என் கேள்விக்கென்ன பதில், வெள்ளி கிண்ணம் தான், அத்தை மகள் ஆகிய மனது மறக்காத காலத்தால் அழியாத பாடல்கள் உள்ளன.
மனிதன்
1987வ் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், வினுசக்கரவர்த்தி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடி மாபெரும் வெற்றி பெற்றது.
சந்திரபோஸின் இசையில் பாடல்கள் சூப்பர். இந்தப்படத்திற்கு கதை எழுதியவர் பஞ்சு அருணாசலம். காள காள, மனிதன் மனிதன், முத்து முத்து பெண்ணே, வானத்த பார்த்தேன், ஏதோ நடக்கிறது ஆகிய பாடல்கள் உள்ளன.
இதே பெயரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க 2016ல் வெளியானது. இந்தப்படத்தை இயக்கியவர் அகமது.
மாமனிதன்
சீனுராமசாமியின் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் வெளியான படம். விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். சீனு ராமசாமி தான் விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவரை வைத்து இடம்பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களையும் எடுத்துள்ளார். இந்தப்படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர்.
இதே படம் 1997ல் நெப்போலியன் நடிப்பில் வெளியானது. ஜோடியாக வினிதா நடித்துள்ளார்.
இவை தவிர ஓநாய் மனிதன், பச்சை மனிதன் ஆகிய ஹாலிவுட் படங்களும் உள்ளன.
மனிதரில் இத்தனை நிறங்களா
ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1978ல் வெளியான படம். கமல், ஸ்ரீதேவி, மனோரமா, தங்கவேலு, சுருளிராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
சில நேரங்களில் சில மனிதர்கள்
ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1976ல் வெளியானது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த், லட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயகாந்தன் எழுதிய அக்னி பிரவேசம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட கதை இது.
இதே பெயரில் விஷால் வெங்கட் இயக்கத்தில் 2022ல் புதுப்படம் ஒன்று வெளியானது. இதில் நாசர், இளவரசு, பிரவீன் ராஜா, தமிழரசன், அசோக் செல்வன், ரிஷிகாந்த், ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். 4 கதைகளால் பின்னப்பட்ட படம். ரதன் இசை அமைத்துள்ளார்.