Manivannan: என்னய்யா ஹீரோயினு சொல்லி மீன் காரிய கூட்டிட்டு வந்திருக்க? மணிவண்ணன் சொன்ன நடிகை

by Rohini |   ( Updated:2025-04-10 06:21:10  )
mani
X

mani

Manivannan: தமிழ் சினிமாவில் ஒரு சில பேரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான மணிவண்ணனை எக்காலத்துக்கும் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? அவருடைய சினிமா பார்வை என்பது வேறு. இயக்குனராக பல படைப்புகளை கொடுத்தவர் நடிகராகவும் பல வேடங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் மணிவண்ணனை பற்றிய ஒரு தகவலை நடிகை ரோஜா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரோஜா. இந்தப் படத்தின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி. செல்வமணிக்கு இது மூன்றாவது படம். முதல் படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்துக்கு அது 100வது படமாக அதுவும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

முதல் படத்திலேயே செல்வமணி முத்திரை பதித்தார். இரண்டாவது படம் புலன் விசாரணை. அது அனைவரின் கவனத்தை பெற்றது. அதனால் மூன்றாவது படத்தை ஒரு காதல் படமாக எடுக்கலாம் என்று நினைத்துதான் செம்பருத்தி படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக 16 நடிகைகளை ஆடிசன் செய்தாராம் செல்வமணி. அதுவும் எல்லாருமே பம்பேயில் இருந்து வரவழைக்கப்பட்ட நடிகைகள்.

ஆனால் யாருமே செட்டாகவில்லையாம். ஏனெனில் கடலோரத்தில் இருக்கும் பெண் போல இருக்க வேண்டும். மீனவக் குடும்பம் போல முகத்தோற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக பல நடிகைகள் ரிஜக்ட் செய்து கடைசியாக ரோஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்போது ரோஜாவுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அதோடு கரு நிறமாகத்தான் இருந்தார். ஆனால் இவர்தான் செட்டாவார் என்று செல்வமணிக்கு மனசில் தோன்றியிருக்கிறது.

கடைசியில் ஆடிசன் எல்லாம் அடுத்து ரோஜாவும் படத்தில் கமிட் ஆகிவிட்டார். செல்வமணியின் குரு மணிவண்ணன். ரோஜாவை பார்த்ததும் மணிவண்ணன் ‘என்னய்யா உனக்கு ஹீரோயினுக்கா பஞ்சம்? இப்படி ஒரு ஹீரோயினை கூட்டிட்டு வந்திருக்க? மீன் காரி மாதிரி இருக்காளே’ என செல்வமணியிடம் கூறினாராம். இதை ஒரு சமயம் செல்வமணி ரோஜாவிடமும் சொல்ல மணிவண்ணனிடம் இதை பற்றி கேட்டிருக்கிறார் ரோஜா.

என்ன சார்? அப்படி சொல்லியிருக்கீங்க? ஆனா இப்போ நல்லா நடிக்கிறனு சொல்றீங்க? போட்டோவ பார்த்து எடை போடக் கூடாது சார். அவரவருக்கு என தனித்திறமை இருக்கும் என சொன்னாராம் ரோஜா.

Next Story