More
Categories: Cinema History Cinema News latest news

மணிவண்ணனிடம் ஏமாந்த சிவாஜி!..பெரிய மனுஷன்கிட்ட இப்படியா நடந்துக்குவீங்க?..

இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய திரைப்படம் ஜல்லிக்கட்டு. இந்த திரைப்படம் 1987ம் ஆண்டு வெளியானது.  இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது நடிகர் சத்யராஜ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா ஆகியோரை வைத்து படப்பிடிப்பை வெளியூரில் நடத்த திட்டமிட்டிருந்தனர் படக்குழு.

Advertising
Advertising

படத்தின் சில காட்சிகளை கர்நாடகா, பெங்களூரின் சில இடங்களில் நடத்தி முடித்து விட்டு மீதமுள்ள படப்பிடிப்புகளை சென்னையில் நடத்த திட்டமிட்டனர். மறு நாள் காலை படப்பிடிப்பு என இருந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய அறையில் சத்யராஜ், மணிவண்ணன் மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்களுக்கு சின்னதாக ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பார்ட்டியை முடித்து விட்டு லைட் கூட ஆஃப் பண்ணாமல் திசைக்கு ஒருவராக படுத்து விட்டனராம். சிவாஜி காலை படப்பிடிப்பு என்றால் 5 மணிக்கெல்லாம் எழுந்து தயார் ஆகிவிடுவாராம். அன்றைக்கும் அதிகாலை தயாரானார். சத்தியராஜ் மற்றும் மணிவண்ணன் இருந்த அறையில் லைட் ஆன் – லயே இருந்ததனால் எல்லாரும் ரெடியாகுகிறார்கள் என்று நினைத்த சிவாஜி அறைக்குள் ‘என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்டவாறே வந்தாராம்.

அவரின் குரலை கேட்டு அப்பொழுது தான் எல்லாரும் எழ தொடங்குகின்றனர். அப்போது புத்திசாலித்தனமாக யோசித்த மணிவண்ணன் ஒரு சூட்கேஸை கையில் எடுத்து வெளியே வருகிற மாதிரி வர இவரை பார்த்ததும் சிவாஜி ஓ..ரெடியாகி விட்டீர்களா? சரி நான் முன்னே போகிறேன். நீங்கள் வாருங்கள் என கூறி போய் சென்றுவிட்டாராம். அவ்ளோதான் அடுத்தடுத்து எல்லாரும் கிளம்ப படப்பிடிப்பு தாமதமாக 2 மணி நேரம் கழித்து தான் ஆரம்பிக்கப்பட்டதாம்.

Published by
Rohini

Recent Posts