விஜயசாந்தியை காப்பாற்ற போய் வாழ்க்கையை தொலைத்த மணிவண்ணன்!.. அப்புறம் நடந்த சம்பவம்தான் வேற லெவல்..
கோலிவுட்டில் தனது கொள்கையிள் இருந்து மாறுபடாத ஒரு மனிதராக இருந்தவர் நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன். தேசியம் ,பொதுவுடமை என அவருடைய கருத்துக்கள் மிகவும் பரவலானது. அரசியலைப் பற்றியும் தனது படங்களின் மூலம் தைரியமாகவும் தெளிவாகவும் கூறியவர்.
எதையும் தைரியமாக பேசுவதில் வல்லவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயிலை பார்த்தாராம். படத்தைப் பார்த்து படத்தைப் பற்றிய சில விமர்சனங்களை ஒரு கடிதத்தின் மூலம் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அனுப்பி இருக்கிறார். அந்த விமர்சனத்திலும் ஒரு தெளிவு இருந்ததாம். அதனால் மணிவண்ணனை நேரில் பார்க்க வர சொல்லி இருக்கிறார் பாரதிராஜா.
தன்னை பாரதிராஜா அழைத்ததை நினைத்து மிகவும் சந்தோஷத்துடன் சென்னை வந்தவர் நேராக உதவி இயக்குனராகவும் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் வந்திருக்கிறார் மணிவண்ணன். அதை பாரதிராஜாவிடமும் கூறியிருக்கிறார் மணிவண்ணன். ஆனாலும் கொஞ்ச நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என பாரதிராஜா கூறினாராம்.
பாரதிராஜாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த படம் கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படம் .இந்த திரைப்படத்தில் விஜயசாந்தி முதன் முதலில் அறிமுகமானார். இந்தப் படத்தில் மணிவண்ணனை ஒரு கிளாப் அடிக்கும் உதவியாளராக சேர்த்திருக்கிறார் பாரதிராஜா.
படப்பிடிப்பு ஏதோ ஒரு இடத்தில் மலையடி வாரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது விஜயசாந்திக்கு கிளாப் அடிக்கும் உதவியாளராக மணிவண்ணன் இருந்தாராம். மலைப்பிரதேசம் என்பதால் அந்த மலையில் விஜயசாந்தி நிற்க அவர் கீழே விழுந்து விடுவார் என்ற ஒரு பதற்றத்தில் மணிவண்ணன் வைத்திருந்த கிளாப் போர்டு கீழே உருண்டு வந்து தண்ணீருக்குள் விழுந்து விட்டதாம்.
அந்தக் காலங்களில் எல்லாம் கிளாப் போர்டில் மையால் எழுதி இருப்பார்களாம் .அது தண்ணீருக்குள் விழுந்து விட்டதால் முழுவதுமாக அழிந்து விட்டதாம். இதனால் மிகவும் கோபம் அடைந்த பாரதிராஜா இவன் தனக்கு உதவியாளராக இருக்க தகுதி இல்லை என அவரை வெளியில் துரத்தி விட்டாராம்.
இதையும் படிங்க : ‘விடாமுயற்சி’ யில் அஜித்தை அடுத்து களமிறங்கிய முதல் பிரபலம்?.. அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்…
அதன் பிறகு பாரதிராஜாவை சந்திக்க எத்தனையோ முறை மணிவண்ணன் முயற்சித்திருக்கிறார். ஆனாலும் பாரதிராஜாவை சந்திக்க முடியவில்லை. அதன் பிறகு நேராக பாரதிராஜாவின் மனைவியை சந்தித்து தன்னுடைய நிலைமையை கூறி இருக்கிறார் மணிவண்ணன். அவர் மனைவி சொன்ன பிறகு தான் பாரதிராஜா மணிவண்ணனை மீண்டும் சேர்த்துக் கொண்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறினார்.