More
Categories: Cinema History latest news

சுந்தர்.சி.யைக் கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்… இதுக்கெல்லாமா திட்டுவாரு?

திரைத்துறையில் நடிகர் ஆவதும், இயக்குனர் ஆவதும் சாதாரண விஷயம் அல்ல. அதற்காக ஆரம்பத்தில் பல அவமானங்களையும், கஷ்டங்களையும் சந்தித்தவர்கள் பலர் உண்டு. அவர்களில் பல நடிகர்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம்.

Also read: விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..

Advertising
Advertising

ரஜினிகாந்த், விஜயகாந்த் கூட கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அந்தவகையில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி.யும் ஒருவர். அவர் எப்படி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முன்னுக்கு வந்தாருன்னு பார்ப்போம்.

1995ல் முறைமாமன் படத்தின் மூலம் சுந்தர்.சி. திரைத்துறைக்கு வந்தார். படத்தின் இயக்கி நடித்தார். தொடர்ந்து அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு ஆகிய படங்களில் நடித்தார். கலகலப்பு, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அன்பே சிவம், என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார். 1995ல் முறை மாப்பிள்ளை படத்தை முதன் முதலாக இயக்கினார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

Aranmanai 4

அரண்மனை படத்தைத் தொடர்ந்து 4 பாகங்களாக எடுத்து வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் சுந்தர்.சி. இதன் 5வது பாகம் குறித்தும் வலைதளங்களில் போஸ்டர், டிரைலர்னு வலம் வருகிறது. இவை எல்லாமே போலி என குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி. முதன்முதலில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார். அந்த அனுபவம் குறித்து என்ன சொல்றாருன்னு பாருங்க.

இன்னைக்கு உங்க முன்னாடி ஒரு இயக்குனரா இருக்கேன்னா அதுக்கு காரணமே மணிவண்ணன் சார் தான். லைஃப்ல என்னோட முதல் நாள் முதல் ஷாட் சத்யராஜ் சார் பைக்ல வராரு. கேமரா நடு ரோட்டுல வச்சு இருக்கோம். முன்னாடி சாணி இருக்கு.

Also read: கீர்த்தி சுரேஷை காதலித்த எஸ்கே… கடைசியில் நடந்த பிரச்னை… விளாசும் பிரபலம்

சாணியை எடுங்கன்னு மணிவண்ணன் சார் சொல்றாரு. நான் இன்னொருத்தர சாணி எடுங்கன்னு சொல்றேன். மணிவண்ணன் சார் என்னைப் பார்த்து அசிங்கமா கெட்ட வார்த்தை சொல்லி திட்டுனாரு. சினிமாவுல நான் செய்த முதல் வேலை சாணி அள்ளுனது தான்.

சாணி அள்ளுனது இன்னைக்கு வரை உதவுது. என்னன்னா எந்த வேலை செய்யவும் தயங்கக்கூடாது. மணிவண்ணன் சார் கிட்ட கத்துக்கிட்டது எல்லா வேலையும் நாமளே இழுத்துப் போட்டு பண்ணனும்கறது தான் என்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

Published by
sankaran v

Recent Posts