
Cinema News
மணிவண்ணனுக்கு இப்படி ஒரு ஆசையா?; அதையும் நிறைவேற்றிய மகன்… ஆஹா!
மணிவண்ணன் ஒரு மிக சிறந்த நடிகராக மட்டுமல்லாது ஒரு வெற்றி இயக்குனராகவும் வலம் வந்தவர். “நூறாவது நாள்”, “24 மணி நேரம்”, “ஜல்லிக்கட்டு”, “அமைதி படை” உட்பட பல வெற்றி திரைப்படங்களை மணிவண்ணன் இயக்கியுள்ளார். இதில் “நூறாவது நாள்”, “அமைதி படை” ஆகிய திரைப்படங்கள் இப்போதும் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருபவை.

Manivannan
மணிவண்ணனுக்கு கம்யூனிச சிந்தாத்ததின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரது பல திரைப்படங்களில் அந்த தாக்கம் இருக்கும். மேலும் ஈழ ஆதரவாளராகவும் செயல்பட்டவர். மணிவண்ணனுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உண்டு.
இதில் அவரது மகனான ரகுவண்ணனும் ஒரு நடிகராவார். “மாறா”, “தொடக்கம்”, “கோரிப்பாளையம்”, “நாகராஜ சோழன் எம் ஏ, எம் எல் ஏ” போன்ற திரைப்படங்களில் ரகுவண்ணன் நடித்துள்ளார். ரகுவண்ணன் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் என்று முயன்று வந்தாராம். ஆனால் அவரால் இயக்குனராக ஆகமுடியவில்லையாம்.

Manivannan and Raghuvannan
மணிவண்ணன் மிக தீவிரமான ஈழ ஆதரவாளர் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம். மணிவண்ணனுக்கு ஒரு இலங்கை தமிழ் பெண் மருமகளாக வரவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். எனினும் மணிவண்ணனின் மறைவுக்கு பிறகு அவரின் ஆசைப்படியே அவரின் மகனான ரகுவண்ணன், அபிகைல் என்ற இலங்கை தமிழர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இப்போது இருவரும் லண்டனில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவ்வாறு தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ரகுவண்ணன். இந்த தகவலை ஒரு பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டுள்ளார்.