மணிவண்ணன் என்னை லவ் பண்ணவே விடல!..பல வருட சீக்ரெட்டை பகிர்ந்த சுந்தர் சி...

தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். குறைவான பட்ஜெட்டில் ஹிட் படங்களை கொடுப்பதால் இப்போதும் வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவரை வைத்து படம் எடுத்தால் மினிமம் லாபம் வரும் என்பதால் தயாரிப்பாளர்கள் இவரை நோக்கி செல்கிறார்கள்.

sundar
கார்த்திக், கவுண்டமணியை வைத்து இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் ஒரு மாஸ் ஹிட் திரைப்படமாகும். அதேபோல், பிரசாந்த், வடிவேலுவை வைத்து வின்னர் எனும் ஹிட் படத்தை கொடுத்தவர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
திரைத்துறையில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர்களில் சுந்தர் சியும் ஒருவர். காதல் மற்றும் காமெடி கலந்த கதைகளைத்தான் இவர் அதிகம் இயக்குவார். ஆனால், சொந்த வாழ்வில் காதல் செய்ய ஒருவர் தடையாக ஒருவர் தடையாக இருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா?.. ஆனால் உண்மை அதுதான். அவர்தான் சுந்தர் சியின் குருநாதர் இயக்குனர் மணி வண்ணன்.

manivannan
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு சுந்தர் சி அளித்த பேட்டியில் ‘படப்பிடிப்பில் கதாநாயகிகளுடன் நெருக்கமாக பழக மணிவண்ணன் அவரின் உதவியாளர்களை அனுமதிக்கவே மாட்டார். உதவியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஜீம் கேமரா மூலம் கவனித்துக்கொண்டே இருப்பார். நடிகைகளிடம் உதவியாளர்கள் பேசும்போது உதடு அசைவை வைத்து ‘இதைத்தான் பேசுகிறான்’ எனக்கூறுவார்.

sundar
ஒருமுறை ஒரு பாலிவுட் கதாநாயகிவைத்து அவர் படம் எடுத்துக்கொண்டிருந்த போது அந்த நடிகை மீது எனக்கு ஒரு கிரஷ் ஏற்பட்டது. ஆனால், மணிவண்ணன் என்னை அவருடன் பேச அனுமதிக்கவே இல்லை’ என சுந்தர் சி கூறியிருந்தார்.
இதே சுந்தர் சி நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.