ரசிகர்களை கவர்ந்த ‘மீண்டும்’ திரைப்படத்தின் ‘மஞ்சள் கயிறு’பாடல் வீடியோ...
நடிகர் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ திரைப்டத்தை இயக்கியவர் சரவண சுப்பையா. அதன்பின் ஏபிசிடி படத்தை இயக்கினார். பல வருட இடைவெளிக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் ‘மீண்டும்’.
சிட்டிசன் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது. இந்த படத்தில் கதிரவன் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனகா நடித்துள்ளார். இவர் சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்திருந்தார். பேர் வச்சாலும் என்ற பாடலில் இவருடைய நடனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
இப்படத்தின் படப்பிடிப்பை இலங்கை கடல் பகுதிகளுக்கு சென்றெல்லாம் ரிஸ்க் எடுத்து படக்குழு படமாக்கியுள்ளது. அப்போது, படக்குழுவினர் சிலரை படக்குழு கைது செய்த சம்பவமெல்லாம் நடந்தது. இந்த திரைப்படம் வருகிற 31ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற மஞ்சள் கயிறு பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு நரேன் பாலகுமார் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த பாடலை சரவண சுப்பையாவே எழுதியுள்ளார். இந்த பாடலை பிரியா மாலி, நரேன் பாலகுமார் மற்றும் ஆர்த்த்ஜி கோவிந்தராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடல் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது.