அய்யோ பாவம்... என்னம்மா ஆச்சு உனக்கு? சிம்பு பட நடிகையை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்....!

by Rohini |
manija_main
X

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்ஐஆர் படம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் கெளதம் மேனனின் உதவி இயக்குனரான மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் தவிர மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் கௌதம் மேனனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படம் விரைவில் வெளியாக உள்ளதால் சமீபத்தில் எப்.ஐ.ஆர். படத்தின் டிரைலர் லான்ச் நடைபெற்றது. இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைத்து படக்குழுவினர்களும் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய அனுபவம், இயக்குனர் மற்றும் பிற நடிகர்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

manjima1

ஆனால் ரசிகர்கள் யாரும் அவர் பேசியதை கவனிக்கவில்லை. மாறாக அவரின் தோற்றத்தை தான் பார்த்து கொண்டிருந்தார்கள். காரணம் மஞ்சிமா மோகன் பயங்கரமாக உடல் எடை அதிகரித்து பார்க்கவே ஆண்ட்டி போல தோற்றமளித்தார். இதனால் பலரும் மஞ்சிமா மோகன் உடல் எடை குறித்து தான் விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகனா இது என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு அடையாளம் தெரியாத வகையில் அவர் வெயிட் போட்டுள்ளார்.

manjima3இதனால் பலரும் மஞ்சிமா மோகன் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு குண்டாகிட்டீங்க? உடல் எடையை குறைக்க வில்லையா? என கேட்டு வருகிறார்கள். மேலும் சிலர் இப்பவும் நீங்க அழகா தான் இருக்கீங்க ஆனா உங்க தொழிலுக்காக நீங்க எடைய குறைச்சு தான் ஆகனும்னு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

Next Story