சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட விபத்து.... கொட்டிய ரத்தம்... மறுநாளே படப்பிடிப்பிற்கு வந்த நடிகை....!
முன்பெல்லாம் படங்களில் ஆக்சன் காட்சிகள் என்றால் அது ஹீரோக்களுக்கு மட்டும்தான். பறந்து பறந்து அடித்து வில்லன்களை ஹீரோக்கள் துவம்சம் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. ஆம் இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்கள் ஆக்சன் காட்சிகளில் அசத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஆக்சன் காட்சி ஒன்றில் நடிக்கும்போது பிரபல நடிகை ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் தனுஷுடன் இணைந்து அசுரன் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய மலையாள நடிகை மஞ்சுவாரியர் தான்.
இவர் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. தற்போது தமிழில் அசுரன் படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள 61வது படத்தில் நடிக்க மஞ்சு வாரியார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மஞ்சுவாரியார் நடிப்பில் ஜாக் அண்ட் ஜில் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி உள்ளாராம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சி ஒன்றில் நடித்த மஞ்சுவாரியார் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாம். கிட்டத்தட்ட ஆறு தையல்கள் போடும் அளவிற்கு காயம் பலமாக ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மஞ்சுவாரியார் ஓய்வு எதுவும் எடுக்காமல் மறுநாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். அவரது இந்த அர்ப்பணிப்பை கண்டு ஒட்டுமொத்த படக்குழுவும் திகைத்து நின்றதாம். இந்த தகவலை ஜாக் அண்ட் ஜில் படத்தில் மஞ்சுவாரியாரின் தங்கை கேரக்டரில் நடித்துள்ள நடிகை ரேணு சவுந்தர் என்பவர் கூறியுள்ளார்.