
Cinema News
நல்ல வேல… 40+ நாயகி ஓகே ஆச்சு…! விட்டுருந்தா 50+ க்கு தாவியிருக்கும் AK-61 படக்குழுவினர்…
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் படம் ஏகே – 61. இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கும் இந்த படத்தை போனிகபூர் தான் இயக்குகிறார்.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக செட் போட்டு படப்பிடிப்பை நடத்துகின்றனர் படக்குழு. இதில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஹீரோ வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என தகவல் வர எந்த அளவுக்கு உண்மை என்பது படதரப்பிலிருந்து கூறினால் தான் தெரியும்.
இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். அந்த படத்தில் அவரின் நடிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மஞ்சு வாரியருக்கு முன் வெறொரு பிரபல நடிகையை படக்குழு அணுகியதாக தகவல் வெளியானது. அது வேறு யாருமில்லை, 22 வருடங்களுக்கு முன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த தபுதான். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியவில்லையாம். அவருக்கு பதிலாக தான் மஞ்சு வாரியார் இணைந்திருக்கிறார். 51 வயதான நடிகை தபு தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் எங்களுக்கு 40+ நாயகியே போதும் என கலாய்த்து வருகின்றனர்.