
Cinema News
மஞ்சு வாரியாரா? தெறிச்சு ஓடும் கோடம்பாக்கம்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர்!
அசுரன் படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை மஞ்சு வாரியர். திருநெல்வேலி பாஷையில் பேசி அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருடைய நடிப்பில் எதார்த்தமும் தைரியமும் கலந்திருந்தன. அதனாலேயே அந்த படத்தில் மஞ்சு வாரியார் மிகவும் கவரப்பட்டார்.

manju1
ஒரு அடிமட்ட கிராமத்திலிருந்து வந்த ஒரு பெண் எப்படிப்பட்ட இன்னல்களை எல்லாம் எதிர்கொள்வார் என்பதை அந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார் மஞ்சு வாரியார். அப்படியே திரும்பி பார்த்தால் துணிவு படம். யாரும் எதிர்பார்க்காத ஒரு கெட்டப்பில் வந்து அனைவரையும் மிரள வைத்தார்.
கெத்தான ரோலில் துணிவு படம் மூலம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் மஞ்சுவாரியார். தமிழ் சினிமா வரவேற்க வேண்டிய ஒரு நடிகையாகவே மஞ்சு வாரியார் இருந்தார். ஆனால் அதை அவரே சில சமயங்களில் கெடுத்தும் கொண்டார்.

manju2
இரண்டு பெரிய ஹிட் படங்களில் நடித்த மஞ்சு வாரியாரை ஏன் தமிழ் சினிமாவில் மேற்கொண்டு காண முடியவில்லை என்று விசாரித்ததில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன. தமிழ் சினிமாவில் இருந்து மஞ்சு வாரியாரை அணுகும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தன.
அதாவது தன் படங்களில் நடிக்க மஞ்சுவாரியரை அணுகும் போது அவர் ஏகப்பட்ட ரூல்ஸ்களை கூறுவாராம். முதலில் யார் படம் தயாரிக்கிறார்கள்? இயக்குகிறார்கள் என்பதை எல்லாம் முதலில் குறுஞ்செய்தியாக மெயில் அனுப்ப சொல்லுவாராம் .அதன் பிறகு அவர்களுடைய முழு பயோடேட்டாவையும் அனுப்ப சொல்லுவாராம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை செய்திகளாக பெற்ற பின் அதன் பிறகு அவர்களை நேரில் வரச்சொல்லி பேசுவாராம்.

manju3
இதையெல்லாம் தாண்டி தான் மஞ்சுவாரியாரை ஒரு படத்தில் கமிட் செய்ய முடியுமாம். இந்த நிலையில் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியார். மிஸ்டர் எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் கௌதம் கார்த்திக், ஆர்யா ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கின்றன. படத்தை எப் ஐ ஆர் படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்தையும் இயக்குகிறாராம்.
இதையும் படிங்க : தானா கிடைச்சதும் போச்சு! வந்ததும் வீணாப்போச்சு! கார்த்தி விஷயத்தில் அக்கப்போரு பண்ணும் ரஜினி