அஜித் விஜய் பட கலெக்ஷனை ஓவர்டேக் செய்த இரண்டே திரைப்படங்கள்! லிஸ்ட்ல ரஜினியை காணோம்
Ajith Vijay: சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மலையாள ரசிகர்களை விட தமிழ் ரசிகர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. அதுவும் கொடைக்கானல் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நம்மூர் பசங்க வண்டி வண்டியா படையெடுத்து இப்போது குணா குகையில்தான் குழுமியிருக்கின்றனர்.
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்ற பாடலுக்கு ரீல்ஸ் போடுவதற்காகவே கொடைக்கானலை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தளவுக்கு ஒரு நேரடி மலையாள திரைப்படம் இதுவரை இவ்வளவு பிரபலமாகவில்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: 500 ரூபாய் வாங்கி கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!.. அவரையே கோபப்பட வச்ச தயாரிப்பாளர்!..
கடந்த சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் தமிழ் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 850 ஸ்க்ரீன் ஹவுஸ் ஃபுல்லாக ஓடியிருக்கின்றது இந்தப் படம். எங்கு திரும்பினாலுன் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக இந்தப் படம் வெற்றிப்பெற்றதற்கு எது காரணம் என கணக்கெடுப்பும் எடுக்க தொடங்கி விட்டார்கள்.
ஒரு சாதாரண கதைதான். குழிக்குள் விழுந்த ஒருவரை அவர் நண்பர் காப்பாற்றுவதுதான் இதன் மையக்கருத்து. ஆனால் படம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் குணா பட பாடலா? இல்லை அந்த குணா குகையா? என இன்று வரை ஆச்சரியமாகவே பார்க்கப்படுகின்றது.
இதையும் படிங்க: ஒரு தமிழனா இருந்துட்டு விஜய் இத பண்ணக் கூடாது..அந்த வகையில் அஜித் நல்லவருப்பா! அரசியலுக்கான ஆப்பா?
இதற்கிடையில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் விஜய் , அஜித் பட கலெக்ஷனையும் முந்திவிடுமா என திருச்சி ஸ்ரீதரிடம் கேட்ட போது, அதற்கு பதிலளித்த திருச்சி ஸ்ரீதர் ‘ச்ச ச்ச அப்படியெல்லாம் இருக்காது. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இதுவரை விஜய் அஜித் பட கலெக்ஷனை முந்திய படங்கள் என்றால் இரண்டே படங்கள்தான். ஒன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் கமல் நடித்த விக்ரம் திரைப்படம். அதன் பிறகு கடைசியாக ரஜினியின் ஜெயிலரை சொல்லலாம்’ என கூறியிருக்கிறார்.
அந்தளவுக்கு இங்கு அஜித் விஜய் இருவரின் மாஸ் உச்சத்தில் இருக்கிறது. அவ்வளவு சீக்கிரம் மற்ற மொழி படங்கள் இவர்கள் ரீச்சை அடைய முடியாது என்றும் திருச்சி ஸ்ரீதர் கூறினார்.
இதையும் படிங்க: LCU ஷார்ட் பிலிமில் விக்ரம் ஹீரோவுடன் களமிறங்கும் ரோலக்ஸ் டீம்… மாஸ் அப்டேட்டா இருக்கும் போல!