ஏன் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழு இளையராஜாவை சந்திக்கல? ஒரு வேளை அப்படி எதும் இருக்குமோ?

Published On: March 4, 2024
| Posted By : Rohini
manjummel-boys

Manjumel Boys: தமிழ் திரையுலகில் சமீபகாலமாக மற்ற மொழித் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்துவருகிறது. அந்தளவுக்கு கதைக்களமிக்க பல நல்ல நல்ல படங்கள் மற்ற மொழி சினிமாக்களில் வந்து கொண்டு இருக்கின்றது. சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸை மலையாள சினிமாவை விட தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதுவும் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல’ என்ற பாடல்தான் இப்போது அனைத்து இளைஞர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலாக மாறியிருக்கிறது. இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்த படமாகத்தான் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அமைந்திருக்கிறது. குணா திரைப்படத்தில் படத்தின் கதைப்படி ஹீரோ ஹீரோயினை ஒரு குகையில் அடைத்துவைத்து அவருடைய அன்பை காட்டும் விதமாக இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும்.

இதையும் படிங்க: அள்ள அள்ள குறையாத அழகு!.. ஐஸ்வர்யா அழகில் சொக்கிப்போகும் ரசிகர்கள்!.. போட்டோஸ் உள்ளே!..

காதலின் ஆழத்தை காட்டும் பாடலாக இத்தனை வருடம் கொண்டாடிய ரசிகர்கள் இப்போது மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு நட்புக்கு அடையாளமாக இந்தப் பாடலை கொண்டாடி வருகிறார்கள்.அந்தளவுக்கு நட்பைக் கொண்டாடும் விதமாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அந்தப் பாடலை இணைத்திருக்கிறார்கள். அதே குகையில்தான் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் சில காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள்.

இதனால் படக்குழு முழுவதும் குணா படத்தின் நாயகன் கமல் மற்றும் இயக்குனர் சந்தான பாரதி ஆகியோரை சந்தித்து அவர்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் பெற்றனர். இதற்கிடையில் அந்த படத்திற்கு ப்ளஸே கண்மணி பாடல்தான். அதற்கு காரணமானவரான இளையராஜாவை சந்தித்தார்களா? சந்திக்கவில்லை எனில் ஏன் என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே இருந்து வந்தது.

இதையும் படிங்க: அவங்க அவ்வளோ தரலை.. நீங்களும் இவ்வளோ தர கூடாது… சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்…

இது பற்றி சித்ரா லட்சுமணனிடம் கேட்ட போது மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழு கமல் மற்றும் சந்தான பாரதியை சந்தித்தார்கள் என்றால் அதற்கு ஆதாரம் அது சம்பந்தமான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதுதான். ஒரு வேளை மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழு இளையராஜாவை சந்தித்து அந்தப் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகாமல் கூட இருந்திருக்கலாம் என்று கூறினார்.